UAE: ஷேக் சையத் சுரங்கப்பாதையில் லைட்டிங் சிஸ்டம் மாற்றியமைப்பு..!! 5071 புதிய LED விளக்குகள் பொருத்தம்..!!
அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுமார் 6.3-கிமீ நீளமுள்ள ஷேக் சையத் சுரங்கப்பாதையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப லைட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பில் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதாகவும் அபுதாபி போக்குவரத்து தெரிவித்துள்ளது.
எமிரேட்டின் மிகவும் நீளமான இந்த சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைப்பை மேம்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 5,071 LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது பராமரிப்பு செலவுகளை குறைக்கும் என்றும், சுரங்கப்பாதையின் இடைவிடாத செயல்பாட்டின் காலத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த LED 17 சதவீதம் வரை மின் ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த விளக்குகள் வெளிச்சம் மற்றும் வண்ணங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன, இதன் மூலம் சாலை நிலைமைகள் மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு ஒளி அளவை மாற்றியமைக்கும் சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
அதேசமயம், ஓட்டுநர்களுக்குத் தெரிவுநிலையை அதிகரிப்பதன் மூலமும், போக்குவரத்து விபத்துகளின் நிகழ்தகவைக் குறைப்பதன் மூலமும் அவை சுரங்கப்பாதைக்குள் இரவுச் சூழலை கணிசமாக மேம்படுத்தும் என்றும் அபுதாபி போக்குவரத்து துறை கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel