ADVERTISEMENT

நிலையற்ற வானிலை காரணமாக பயணிகளுக்கு துபாய் ஏர்போர்ட் மற்றும் விமான நிறுவனங்கள் ஆலோசனை வெளியீடு..!!

Published: 1 May 2024, 5:49 PM |
Updated: 1 May 2024, 5:53 PM |
Posted By: admin

அமீரகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வானிலை மோசமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போல் துபாய் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளையும் வழங்கியுள்ளன.

ADVERTISEMENT

அதில் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும்போது மழை மற்றும் போக்குவரத்து காரணமாக ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்குமாறும், அவர்கள் காரிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பயணித்தாலும் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் “நாளைக்கு மோசமான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் இன்டர்நேஷனல் (DXB) மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC) ஆகியவற்றிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்”.

ADVERTISEMENT

“சாலை நெரிசல் காரணமாக ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க, பயணிகள் போக்குவரத்து தொடர்பான புதுப்பிப்புகள் மற்றும் மாற்று வழிகளுக்கு ஸ்மார்ட் ஆப்ஸைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். மேலும் DXB டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு செல்ல துபாய் மெட்ரோவைப் பயன்படுத்துவதைப் பரிசீலிக்கிறோம்” என்று துபாய் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மே 2 ஆம் தேதி துபாயில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணம் செய்தால், சாலையில் தாமதம் ஏற்படலாம். விமான நிலையத்தை அடைய கூடுதல் பயண நேரத்தைச் ஒதுக்கவும். முடிந்தவரை துபாய் மெட்ரோவைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் விமானங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, பயணிகளின் விவரங்கள் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

ஃப்ளைதுபாய் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மே 2 ஆம் தேதி துபாயில் முன்னறிவிக்கப்பட்ட மோசமான வானிலை காரணமாக, பயணிகள் கார் அல்லது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தாலும் துபாய் இன்டர்நேஷனலுக்கு (DXB) செல்ல கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில் “நீங்கள் சையத் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், தாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் நேரத்தை ஒதுக்கி, அதற்கேற்ப உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் இடையே எதிஹாட் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், விமான நிலையத்தை அடைவதற்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்க, அவர்களின் இடமாற்றத்தை முன்கூட்டியே சரிபார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

நாட்டில் நிலவ இருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக, தனியார் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு, தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு, நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதே போல் பள்ளிகளும் தொலைதூர கல்வி முறையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.