ADVERTISEMENT

கனமழை எச்சரிக்கை: துபாய் மெட்ரோ சேவையை நீட்டித்த RTA.. இந்த 5 இடங்களில் மட்டுமே நிற்கும் எனவும் அறிவிப்பு.!!

Published: 1 May 2024, 3:37 PM |
Updated: 1 May 2024, 3:42 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றிரவு முதல் எதிர்பார்க்கப்படும் நிலையற்ற வானிலை காரணமாக, மே 1ம் தேதி புதன்கிழமையான இன்றும் மற்றும் மே 2ம் தேதி வியாழக்கிழமையான நாளையும் துபாய் மெட்ரோ இயங்கும் நேரங்கள் நீட்டிக்கப்படுவதாக RTA அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின்படி (RTA), நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் துபாய் மெட்ரோ சேவையானது மறுநாள் அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில்கள் சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து புறப்பட்டு எமிரேட்ஸ் மெட்ரோ நிலையம், விமான நிலைய முனையம் 1 நிலையம், விமான நிலைய முனையம் 3 நிலையம் மற்றும் GGICO நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்றும் RTA கூறியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், பயணிகள் புறப்படுவதற்கு முன் தங்களுடைய நோல் கார்டுகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15 திர்ஹம்கள் இருப்பதை உறுதிசெய்யுமாறும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

கூடவே, மெட்ரோவில் இருந்து இறங்கிய பிறகு, பயணிகள் தங்கள் இடங்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக, சென்டர்பாயிண்ட் மற்றும் GGICO நிலையங்களில் டாக்சி சேவைகள் வழங்கப்படும் என்றும் RTA தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel