அமீரக செய்திகள்

UAE: பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களுக்கு புதிய திறக்கும் நேரத்தை அறிவித்த துபாய் முனிசிபாலிட்டி..!!

துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வார இறுதி நாட்களின் போது பொழுதை கழிப்பதற்கு குடும்பமாகவும், நண்பர்களாகவும் சேரந்து செல்ல விரும்பும் இடங்களில் முதன்மையானதாக பொழுதுபோக்கு பூங்காக்கள்தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும்.

அவ்வாறு துபாய் குடியிருப்பாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கக்கூடிய ஏரிக்கரை பூங்காக்கள், குடியிருப்பு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கான புதிய திறந்திருக்கும் நேரத்தை துபாய் முனிசிபாலிட்டி இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கூரிய பொதுப்பூங்காக்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், மற்றும் வெள்ளி, சனி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் திறந்திருக்கும் என தெரியவந்துள்ளது.

துபாய் முனிசிபாலிட்டியின் மெகா திட்டங்களின் கீழ், துபாயை வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக உயர்த்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பொதுப் பூங்காக்கள் மற்றும் தனித்துவமான பொழுதுபோக்கு இடங்கள் துபாயில் திறக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், துபாய் முனிசிபாலிட்டி அல் வர்கா 1 மற்றும் 4 மாவட்டங்களில் மொத்தம் 8 மில்லியன் திர்ஹம் செலவில் இரண்டு பூங்காக்களை கட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!