ADVERTISEMENT

துபாயில் இடைவிடாது பெய்து வரும் கனமழை.. சாலைகளில் மீண்டும் தேங்கும் மழைநீர்.. ஆரஞ்ச் அலர்ட் விடுத்த NCM..!!

Published: 2 May 2024, 10:27 AM |
Updated: 2 May 2024, 10:36 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்தே லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நாட்டில் நிலவிய நிலையற்ற வானிலை இன்று தீவிரமடையும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டதைப் போன்று இன்று அதிகாலை 3 மணி முதல் அபுதாபி, துபாய் உட்பட அனைத்து எமிரேட்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் இன்று அதிகாலை கொட்டித் தீர்த்த கனமழையால் அபுதாபி சிட்டி, முஸாஃபா உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இருப்பினும் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளதால் அபுதாபியின் ஓரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்பொது துபாயில் கனமழை பெய்து வருவதாக அமீரகத்தின் புயல் மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கனமழையானது அபுதாபியின் மேற்கு பகுதியிலிருந்து படிப்படியாக நகர்ந்து அமீரகத்தின் அனைத்து எமிரேட்களுக்கும் பரவும் என புயல் மையம் அறிவித்ததைப் போன்று தற்போது துபாய், ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்களில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

மேலும் விடியற்காலையில் துபாயில் உள்ள ஜெபெல் அலி, அல் மக்தூம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், துபாய் இன்வெஸ்ட்மெண்ட் பார்க், ஜூமேரா வில்லேஜ் ட்ரைஆங்கிள், துபாய் இன்டஸ்ட்ரியல் சிட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழையின் வேகம் சற்றே குறைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் துபாயின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

துபாயில் தற்சமயம் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மீண்டும் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மேலும் தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக சில குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தற்போது நாட்டில் நிலவி வரும் இந்த வானிலையானது இன்று இரவு 8 மணி வரையிலும் நீடிக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. இதனால் அபுதாபி துபாய் உட்பட அமீரகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு தேசிய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த கனமழை காரணமாக துபாயில் உள்ள பீச், பாரக் உள்ளிட்ட பொது இடங்களும், அதேபோன்று ஷார்ஜாவில் மெடிக்கல் ஸ்கிரீனிங் சென்டரும் இன்று மூடப்படுவதாக இரு எமிரேட்களும் அறிவித்துள்ளன. கூடவே, மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் இருந்து குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel