ADVERTISEMENT

UAE: இந்திய தொழிலாளர்களின் குறைகளை தீர்க்கும் ‘ஓபன் ஹவுஸ்’ மன்றத்தை மீண்டும் தொடங்கிய துணைத் தூதரகம்..!!

Published: 6 May 2024, 10:40 AM |
Updated: 6 May 2024, 10:41 AM |
Posted By: admin

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர்களின் குறைகளைத் தீர்க்க, முன்அனுமதி இல்லாமல் அனைவரையும் அனுமதிக்கும் ‘ஓபன் ஹவுஸ்’ மன்றத்தை மீண்டும் தொடங்கியதுள்ளது.

ADVERTISEMENT

சில வருடங்களுக்கு பிறகு துபாயில் உள்ள துணைத் தூதரகத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த குறை தீர்க்கும் மன்றம், கடந்த மே 4ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடந்துள்ளது. இதில் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் குறைகளை இந்திய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எந்தப் பதிவும் தேவையில்லை என்றும், தூதரகத்தின் ஆடிட்டோரியத்தில் நடக்கவிருக்கும் இந்த மன்றத்தை இந்திய வெளிநாட்டவர்கள் நேரடியாக அணுகலாம் என்றும் இந்திய துணைத் தூதரகம் தனது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இது குறித்து தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசுகையில், தற்போதைய இந்திய தூதர் சதீஷ் குமார் சிவன் பதவியேற்ற பிறகு, பெரிய அளவில் நடத்தப்பட்ட முதல் ஓபன் ஹவுஸ் இது என்றும், பங்கேற்பாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் குறைதீர்ப்பு கூட்டம் அடிக்கடி நடத்தப்படும் என்றும் உறுதியறித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்திய துணைத் தூதரகத்தில் நேரடியாக குறைகளை தீர்க்கும் ‘ஓபன் ஹவுஸ்’ நிகழ்வானது மாதந்தோறும் நடைபெரும் ஒரு வழக்கமான நிகழ்ச்சியாக இருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களுக்காக இந்த நிகழ்வானது துணைத் தூதரக அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதன் பிறகு, மீண்டும் 2018 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியத் தூதரக அதிகாரியான விபுல் இந்த ஓபன் ஹவுஸ் மன்றத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய நிலையில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்த நிகழ்வானது மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இது தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அதில் பெரும்பான்மாயாக இருக்கும் தொழிலாளர்களின் குறைகளை கண்டறிந்து அதற்கு தீரவு காண இந்திய துணைத் தூதரகம் பல முயற்சிகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel