ADVERTISEMENT

துபாயிலிருந்து அபுதாபி நோக்கி செல்லும் சாலையில் நடைபெறும் பராமரிப்பு பணி.. போக்குவரத்தில் தாமதம்..!!

Published: 11 May 2024, 1:44 PM |
Updated: 11 May 2024, 1:48 PM |
Posted By: admin

அபுதாபியில் இருக்கக்கூடிய முக்கிய சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பகுதியளவு சாலையானது மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தாமதங்களை அனுபவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதாவது துபாயில் இருந்து அபுதாபி செல்லும் ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையானது (E10) நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மூடல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கி மே 13 திங்கள் காலை 6 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டிற்கு அருகில் உள்ள அபுதாபியை நோக்கிய இந்த சாலையில் இருக்கக்கூடிய மூன்று பாதைகள் (lanes) மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதைகள் மூடப்படும் என்றும், பச்சை நிறத்தில் உள்ள பாதைகளில் எவ்வித தடையுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. எனவே இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தாமதங்களை தவிர்க்க கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel