ADVERTISEMENT

துபாய்: வாகன அபராதங்களை இனி சேவை மையங்களில் செலுத்த முடியாது..!! RTA வெளியிட்ட அறிவிப்பு..!!

Published: 26 May 2024, 9:11 PM |
Updated: 26 May 2024, 9:11 PM |
Posted By: admin

அமீரக குடியிருப்பாளர்கள் இன்று மே 26 முதல் தங்களின் வாகன அபராதங்களை வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் அல்லது சேவை வழங்குநர் மையங்கள் மூலம் செலுத்த முடியாது என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது சமூக ஊடகமான X தளத்தில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, வாடிக்கையாளர்கள் இனிமேல் தங்களின் அபராதங்களை சில எளிய படிகளில் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை RTAவின் இணையதளம் அல்லது அதன் ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் செய்யலாம் எனவும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, RTA அதன் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷனின் புதிய பதிப்பை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இந்த புதிய பதிப்பானது பயனர்களுக்கு அதன் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அத்துடன் இந்த புதிய பதிப்பில், சாலிக் ஆன்லைன் பேமெண்ட்கள், வவுச்சர் டாப்-அப் மற்றும் நோல் டாப்-அப் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அபராதம் விதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி இது போன்ற சேவைகளுக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் மூலம் தொந்தரவு இல்லாமல் பணம் செலுத்தலாம்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA வெளியிட்டுள்ள ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, இப்போது iOS மற்றும் Android இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel