ஷார்ஜாவில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளான அல் இத்திஹாத் சாலை மற்றும் அல் வஹ்தா சாலையில் நடைமுறையில் இருந்து வந்த வேக வரம்பானது, இன்று மே 25ம் தேதி சனிக்கிழமை முதல் குறைக்கப்படுவதாக ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது.
இது குறித்து SRTA தனது சமூக ஊடகப் பதிவில், அல் இத்திஹாத் சாலை மற்றும் அல் வஹ்தா சாலையில் வேக வரம்பானது 100 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ வேகமாக குறைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, புதிய வேக வரம்பை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை SRTA அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, ராஸ் அல் கைமா காவல்துறை அதன் எமிரேட்டின் ஒரு முக்கிய சாலையில் வேக வரம்பை அதிகரிப்பதாக அறிவித்தது. அதன்படி, அல் வதன் சாலையில் வேக வரம்பு 100 கிமீ வேகத்தில் இருந்து 120 கிமீ ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel