துபாயில் இருக்கக்கூடிய முக்கிய பகுதிகளில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பார்க்கிங் அனுபவத்தை நிறுவுவதற்காக 7,000 க்கும் மேற்பட்ட புதிய கட்டண பார்க்கிங் இடங்களை துபாய் அறிமுகப்படுத்தவுள்ளது. துபாயில் பணம் செலுத்தும் பொது பார்க்கிங் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமான Parkin நிறுவனத்தின் படி, இந்த புதிய இடங்களுக்கான கட்டண வாகன நிறுத்தம் வரும் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய கட்டண பார்க்கிங் இடங்கள்
ஆறு முக்கிய துபாய் பகுதிகளில் புதிதாக கட்டண பார்க்கிங் திட்டங்கள் செயல்முறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை:
- ஜதாஃப் வாட்டர்ஃப்ரண்ட் (Jaddaf Waterfront)
- அல் சுஃபூஹ் கார்டன்ஸ் (Al Sufouh Gardens)
- அர்ஜான் (Arjan)
- மஜன் (Majan)
- லிவான் 1 மற்றும் 2 (Liwan 1 & 2)
- துபாய் நில குடியிருப்பு வளாகம் (Dubai Land Residence Complex – DLRC)
பார்க்கிங் கட்டணம்
வெவ்வேறு கட்டணங்களுடன் பார்க்கிங் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்:
Zone – A – அர்ஜன், ஜதஃப் வாட்டர் ஃப்ரண்ட் மற்றும் அல் சுஃபூஹ் கார்டன்ஸ்
- 30 நிமிடங்கள் – 2 திர்ஹம்ஸ்
- ஒரு மணிநேரம் – 4 திர்ஹம்ஸ்
- இரண்டு மணிநேரம் – 8 திர்ஹம்ஸ்
- மூன்று மணி நேரம் – 12 திர்ஹம்ஸ்
- நான்கு மணிநேரம் – 16 திர்ஹம்ஸ்
Zone – B – அர்ஜன், DLRC, மஜன், லிவான் 1 மற்றும் 2, அல் சுஃபுஹ் கார்டன்ஸ்
- ஒரு மணிநேரம் – 3 திர்ஹம்ஸ்
- இரண்டு மணிநேரம் – 6 திர்ஹம்ஸ்
- மூன்று மணி நேரம் – 9 திர்ஹம்ஸ்
- நான்கு மணிநேரம் – 12 திர்ஹம்ஸ்
- ஐந்து மணிநேரம் – 15 திர்ஹம்ஸ்
- 24 மணிநேரம் – 20 திர்ஹம்ஸ்
பார்க்கிங் நேரங்கள்
கட்டண வாகன நிறுத்தமானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
பொது பார்க்கிங்கிற்கு எப்படி பணம் செலுத்துவது?
பார்க்கிங்கிற்கு பணம் செலுத்த துபாய் பல்வேறு வசதியான வழிகளை வழங்குகிறது. SMS, வாட்ஸ்அப், RTA ஆப் மற்றும் ஆங்காங்கே இருக்கக்கூடிய பார்க்கிங் இயந்திரங்கள் மூலம் பார்க்கிங்கிற்கான கட்டணத்தை செலுத்தலாம்.
துபாய் மாலில் அமலுக்கு வரும் கட்டண வாகன நிறுத்தம்
ஜூலை முதல் துபாயில் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய மற்றொரு இடம் துபாய் மால் ஆகும். இது ஜூலை 1 முதல் சாலிக் நிறுவனத்துடன் இணைந்து கட்டண பார்க்கிங் முறையை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் கட்டண பார்க்கிங் முறையால் அப்பகுதிகளில் வாகனங்கள் வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு மாதம் கிட்டத்தட்ட 300 திர்ஹம்ஸ் வீதம் செலவாகும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel