ADVERTISEMENT

அபுதாபி: Daman பேசிக் இன்சூரன்ஸ் கவரேஜில் மாற்றம்.. மருத்துவ சேவைக்கு ஜூலை 1 முதல் கூடுதல் கட்டணம்..!!

Published: 2 Jun 2024, 6:16 PM |
Updated: 3 Jun 2024, 9:53 AM |
Posted By: admin

அபுதாபியின் முதன்மையான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமான தமானின் (Daman) ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் சிலர், அடுத்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் சில மருத்துவ சேவைகளுக்கு அதிக பிரீமியம் மற்றும் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தமானின் அடிப்படைத் திட்டத்தின் கவரேஜை (basic coverage) உயர்மட்ட மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்துவதால் இந்த கட்டண மாற்றம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால், தமான் ஹெல்த் இன்சூரன்ஸின் அடிப்படை கவரேஜ் உள்ளிட்ட சில வகைகளுக்கான காப்பீட்டு திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரீமியம் பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், மருத்துவ சேவைகளின் போது சில இணை கட்டணங்களும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த புதிய கட்டண மாற்றம் அமலுக்கு வந்தவுடன், அடிப்படைக் காப்பீட்டுத் திட்டத்திற்கு குழுசேர்ந்தவர்கள் ஒவ்வொரு உள்நோயாளி சேவைக்கும் (In patient service) ஒரு நாள் கட்டணமாக 200 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் வருடத்திற்கு அதிகபட்ச கட்டணம் 500 திர்ஹம்ஸ் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும், அடிப்படைத் திட்டப் பயனர்கள் அவர்களுக்கான வருடாந்திர காப்பீட்டுத் தொகையைத் தாண்டிச் செல்லாவிட்டால், உள்நோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் ஒரு நாள் நடைமுறைகளுக்கு நிலையான கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை என்று தமானின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையிலும், தமான் ஹெல்த் இன்சூரன்ஸின் பேசிக் கவரேஜ் வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் அபுதாபியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில், மருத்துவ ஆலோசனைக் கட்டணமாக 20 திர்ஹம்ஸும், நோயறிதல் சேவைகள் மற்றும் இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்ற ஆய்வக சோதனைகளுக்கு இணை கட்டணமாக 10 திர்ஹம்ஸ் மட்டுமே கூடுதலாக செலுத்துகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், புதிய கட்டண மாற்றத்தின் கீழ் இவ்வாறான சோதனைகளுக்கு 20 சதவீதம் இணை-கட்டணம் (20 திர்ஹம்ஸ்) செலுத்த வேண்டும் என்றும், அது ஒரு வருகைக்கு அதிகபட்சம் 50 திர்ஹம்ஸாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. அத்துடன், மெடிக்கல்களில் வழங்கப்படும் மருந்து கவரேஜ்ஜிற்கு (medicine coverage) 30 சதவீதம் இணை-கட்டணமும், ஆண்டிற்கு அதிகபட்சம் 1,500 திர்ஹம்ஸ் காப்பீடு பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளுக்கான அணுகல்

நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் நிவனமான தமான் அதன் அடிப்படைத் திட்டத்தின் கவரேஜை உயர்மட்ட மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்துவதால், பிரீமியங்கள் மற்றும் இணைச் செலுத்துதல்கள் அதிகரிக்கின்றன. எனவே, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் இப்போது சில முக்கிய தலைவர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பெறும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளையும் அணுகலாம். அவற்றில் பின்வருவன போன்ற சிறப்பு மையங்கள் (CoE) அடங்கும்:

  • க்ளீவ்லேண்ட் கிளினிக் அபுதாபி (Cleveland Clinic Abudhabi), வயது வந்தோருக்கான இருதய அறுவை சிகிச்சை மற்றும் பக்கவாதத்திற்கான CoE
  • ஷேக் ஷக்பூத் மெடிக்கல் சிட்டி (Sheikh Shakhbout Medical City – SSMC) பக்கவாதத்திற்கான CoE
  • ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி (Sheikh Khalifa Medical City – SKMC), குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைக்கான CoE

இதன் மூலம் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதியில் உள்ள 1,250 க்கும் மேற்பட்ட சுகாதார வசதிகளிலிருந்து மருத்துவம் மற்றும் அவசர சேவைகளுக்கான அணுகலுடன், இந்தத் திட்டத்தில் கவரேஜ் வைத்திருக்கும் அபுதாபி குடியிருப்பாளர்கள் ஆண்டுதோறும் 250,000 திர்ஹம்ஸ் வரை சுகாதார காப்பீட்டையும் பெற முடியும்.

அந்த வகையில், அபுதாபியில் வசிக்கும் சமூக உறுப்பினர்கள் எமிரேட்டில் உள்ள மிக உயர்ந்த தரமான மருத்துவ பராமரிப்புக்கான அணுகலைப் பெறுவதை உறுதிசெய்யும் உள்ளூர் அரசாங்க விதிமுறைகளின் ஒரு பகுதியாக இந்த புதிய கொள்கை மாற்றங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel