ADVERTISEMENT

ஈத் அல் அதா விடுமுறையில் மட்டும் 5.6 லட்சம் பயணிகளை கையாண்ட துபாய் ஏர்போர்ட்..!! புள்ளி விபரங்களை வெளியிட்ட GDRFA..!!

Published: 23 Jun 2024, 8:09 PM |
Updated: 23 Jun 2024, 8:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் ஈத் அல் அதாவை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறைக்கு பலரும் பல்வேறு திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். அதே போல் பெரும்பாலானோர் இந்த நான்கு நாட்கள் விடுமுறையை தனது குடும்பத்துடன் செலவழிக்க சொந்த ஊர்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமீரகத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் மட்டும் அரை மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாயின் விமான நிலையங்கள் வழியாக சென்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது கடந்த ஜூன் 15 முதல் 18 வரை, துபாய் விமான நிலையங்களில் மொத்தம் 562,347 பயணிகள் பயணம் செய்ததாக துபாயின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது.

இது தவிர அமீரகத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரை சென்றவர்கள் திரும்பி வரும் நிலையில், அப்பயணிகளின் வருகைக்கு துபாய் விமான நிலையம் தயாராக இருப்பதாகவும் GDRFA தெரிவித்துள்ளது. மேலும் அவர்களை வரவேற்கும் வகையில் சிறப்பு முத்திரையையும் ஆணையம் தயார் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

GDRFA இன் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி இது பற்றி கூறுகையில், நான்கு நாட்களில் அரை மில்லியன் பயணிகளை துபாய் விமான நிலையம் கையாண்டிருப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வெளிநாட்டினருக்கும் துபாய் எவ்வளவு பிரபலமானது என்பதை நிரூபிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் விடுமுறைகளை பணியிடத்தில் கழிக்கவும், பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும் தயங்காத அனைத்து GDRFA ஊழியர்களுக்கும் தனது நன்றிகளையும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பயணிகளின் பயணங்களை முடிந்தவரை சீராகச் செய்ய GDRFA எப்போதும் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel