ADVERTISEMENT

ஈத் அல் அதா விடுமுறை: இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய் மற்றும் ஷார்ஜா..!!

Published: 13 Jun 2024, 5:38 PM |
Updated: 13 Jun 2024, 5:38 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்கள் இலவச பார்க்கிங், நீட்டிக்கப்பட்ட போக்குவரத்து சேவை போன்றவற்றை அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

துபாய்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பாளர்கள் எமிரேட்டில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்கள் தவிர அனைத்து பொது பார்க்கிங் இடங்களையும் ஜூன் 15, சனிக்கிழமை முதல் ஜூன் 18, செவ்வாய்க்கிழமை வரை இலவசமாக அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் கட்டணங்கள் ஜூன் 19 ஆம் தேதி வசூலிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷார்ஜா:

துபாயைப் போலவே, ஷார்ஜாவிலும் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஜூன் 16 முதல் ஜூன் 18 வரையிலான நாட்களுக்கு பொது பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீல நிற அடையாள பலகைகள் கொண்ட பார்க்கிங் மண்டலங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடங்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணத்திற்கு உட்பட்டதாகும்.

ADVERTISEMENT

அதேசமயம், பண்டிகைக் காலம் முழுவதும் விதிமீறல்களைக் கண்டறிய பார்க்கிங் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஈத் தொழுகை அரங்குகளைப் பாதுகாப்பதற்கும், வழிபாட்டாளர்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடத்தை உறுதி செய்வதற்கும் சிறப்புக் குழுக்கள் செயல்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

பார்க்கிங் மீறல்கள்:

  • ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடத்தை எடுத்துக்கொள்வது
  • வாகனங்களின் பின்னால் சீரற்ற முறையில் நிறுத்துதல்
  • போக்குவரத்துக்கு இடையூறாக பார்க்கிங் செய்வது

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT