ADVERTISEMENT

UAE: ஈதை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க ஷேக் ஹம்தான் உத்தரவு!!

Published: 8 Jun 2024, 5:24 PM |
Updated: 8 Jun 2024, 5:25 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் 16ம் தேதி ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு துபாய் எமிரேட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்திற்கான சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட ஜூன் 13-ம் தேதி அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இதனை துபாய் அரசாங்கம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதியத்தை வழங்குவதன் மூலம், அவர்கள் பண்டிகைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும் என்றதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துபாயின் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் மாதம் 15ம் தேதி அரபா தினம் என்பதால், அன்றைய தினமான சனிக்கிழமை முதல் ஜூன் 18ம் தேதி செவ்வாய்கிழமை வரை என ஈத் அல் அதாவிற்கு நான்கு நாட்கள் நீண்ட விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT