ADVERTISEMENT

ஜூலை 1 முதல் கட்டண முறை: துபாய் மால் பார்க்கிங் குறித்த கேள்விகளும், பதில்களும் இங்கே..!!

Published: 29 Jun 2024, 11:01 AM |
Updated: 29 Jun 2024, 11:01 AM |
Posted By: admin

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வணிக வளாகமும், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் மிகவும் விருப்பமான சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் துபாய் மால், துபாயின் டோல் ஆப்பரேட்டரான சாலிக் நிறுவனத்துடன் இணைந்து வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டண பார்க்கிங்கை அறிமுகப்படுத்த உள்ளது.

ADVERTISEMENT

துபாய் மால் திறக்கப்பட்டதிலிருந்து பொதுமக்களுக்கு இலவச பார்க்கிங்கை வழங்கி வந்த நிலையில், தற்போது முதன் முறையாக துபாய் மால் கட்டண பார்க்கிங் வசதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் அமீரகத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான இந்த துபாய் மாலில் சுமார் 13,000க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, வரும் ஜூலை 1 முதல் கட்டண முறைக்கு மாறவிருக்கும் துபாய் மாலில் எந்தெந்த பகுதிகளில் பாரக்கிங் வசதிகள் கட்டண முறைக்கு மாற்றப்படவுள்ளது? எந்த பகுதிகளில் இலவச பார்க்கிங் தொடரும் என்பது பற்றிய முழு விபரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மால் வெளியிட்ட அறிவிப்பின் படி, புதிய கட்டண பார்க்கிங் அமைப்பு கிராண்ட் பார்க்கிங், சினிமா பார்க்கிங் மற்றும் ஃபேஷன் பார்க்கிங் ஆகியவற்றிற்கு பொருந்தும் என்றும், அதே நேரத்தில் ஜபீல் மற்றும் பவுன்டைன் வியூஸ் பார்க்கிங் இடங்கள் இலவசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் அவர்கள் சாலிக் சேனல்கள் மூலம் விலக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு, PoD தகுதிப் பட்டியலைச் சரிபார்க்க சாலிக் இணையதளத்தைப் பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சாலிக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு துபாய் மால் பார்க்கிங் கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

ஆம், சாலிக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள், மாற்றுத் திறநாளிகள், போலீஸ், ஆம்புலன்ஸ்கள், சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட வாகனங்களுக்கு துபாய் மாலில் பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு பெற முடியுமா?

தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, அமீரகத்தின் ​​மூத்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் துபாய் மால் பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு பெற தகுதியற்றவர்கள்.

இலவச பார்க்கிங்கிற்கான சலுகை காலம் எவ்வளவு?

துபாய் மால் பார்க்கிங்கைப் பயன்படுத்தும் போது, ​​வாகன ஓட்டிகள் வார நாட்களில், முதல் நான்கு மணி நேரத்தில் இலவச பார்க்கிங்கை அனுபவிக்கலாம் என்றும், பின்னர் வாகனம் நிறுத்துவதற்கு 20 திர்ஹம்ஸ் முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாரஇறுதி நாட்களில் முதல் ஆறு மணிநேரம் இலவசமாக அணுக முடியும், கூடுதலாக நிறுத்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கட்டணம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. துபாய் மாலில் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடம் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வார நாட்கள்: 

  • 0-4 மணிநேரம் : இலவசம்
  • 4-5 மணிநேரம் : 20 திர்ஹம்ஸ்
  • 5-6 மணிநேரம் : 60 திர்ஹம்ஸ்
  • 6-7 மணிநேரம் : 80 திர்ஹம்ஸ்
  • 7-8 மணிநேரம் : 100 திர்ஹம்ஸ்
  • 8 மணி நேரத்தை விட அதிக நேரம்: 200 திர்ஹம்ஸ்
  • 12 மணி நேரத்தை விட அதிக நேரம்: 500 திர்ஹம்ஸ்
  • 24 மணி நேரத்தை விட அதிக நேரம்: 1,000 திர்ஹம்ஸ்

வாரயிறுதி நாட்கள்:

  • 0-4 மணிநேரம் : இலவசம்
  • 4-5 மணிநேரம் : இலவசம்
  • 5-6 மணிநேரம் : இலவசம்
  • 6-7 மணிநேரம் : 80 திர்ஹம்ஸ்
  • 7-8 மணிநேரம் : 100 திர்ஹம்ஸ்
  • 8 மணி நேரத்தை விட அதிக நேரம்: 200 திர்ஹம்ஸ்
  • 12 மணி நேரத்தை விட அதிக நேரம்: 500 திர்ஹம்ஸ்
  • 24 மணி நேரத்தை விட அதிக நேரம்: 1,000 திர்ஹம்ஸ்

பார்க்கிங் கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?

துபாய் மாலில் டிக்கெட் இல்லாத பார்க்கிங்கிற்கான தானியங்கி கட்டணம் கார்களில் உள்ள நம்பர் ப்ளேட்டை கண்டறிந்து வசூலிக்கப்படும். தடையற்ற பார்க்கிங் அமைப்பு (barrier free parking system), அதே தானியங்கி நம்பர் ப்ளேட் அங்கீகாரம் மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலிக் டேக்குகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

வாகனம் பார்க்கிங் தளத்திற்குள் நுழையும் போது ஒரு கேமரா காரின் பிளேட் எண்ணைப் படம்பிடித்து, நுழைவு நேரத்தைப் பதிவு செய்யும். வெளியேறும் போது, ​​கேமரா மீண்டும் பிளேட் எண்ணை ஸ்கேன் செய்யும், மொத்த பார்க்கிங் நேரத்தை கணினி கணக்கிடும் பின்னர் அடையாளம் காணப்பட்ட சாலிக் கணக்கில் இருந்து கட்டணத்தை கழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த சாலிக் டேக் தேவையா?

ஆம், துபாய் மால் பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த, நீங்கள் செயல்படுத்தப்பட்ட சாலிக் டேக் மற்றும் சாலிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

பார்க்கிங் கட்டணம் சர்வதேச நம்பர் ப்ளேட் அல்லது சுற்றுலா பயணிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு பொருந்துமா?

ஆம், துபாய் மால் பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்த, நீங்கள் செயல்படுத்தப்பட்ட சாலிக் டேக் மற்றும் சாலிக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.

சாலிக் கணக்கில் இருப்பு இல்லாமல் வாகனத்தை நிறுத்தினால், பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் இருக்கிறதா?

உங்களிடம் போதுமான இருப்பு இல்லை என்றால், உங்கள் சாலிக் கணக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டவுடன், நிலுவையில் உள்ள பார்க்கிங் கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும்.

போதுமான கிரெடிட் அல்லது சாலிக் டேக் இல்லாவிட்டால் அபராதம் எவ்வளவு? 

சரியான மீறல் கட்டணம் குறித்து விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், உங்களிடம் போதுமான கிரெடிட் அல்லது செயலில் உள்ள சாலிக் டேக் இல்லையென்றால், சாலிக் கணக்கு உருவாக்கப்பட்டு அல்லது ரீசார்ஜ் செய்யப்பட்டவுடன், நிலுவையில் உள்ள பார்க்கிங் கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும்.

இலவச நேரம் முடியும் முன் வாகன ஓட்டிகளுக்கு SMS அறிவிப்பு வருமா?

இல்லை, இந்த சேவை இன்னும் கிடைக்கவில்லை. சாலிக் இணையதளம் மற்றும் ஆன்லைன் சேனல்களைப் பயன்படுத்தி உங்கள் சாலிக் கணக்கு இருப்பை தொடர்ந்து கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு கீழே வராமல் இருக்க அதை ரீசார்ஜ் செய்து வைத்திருக்கவும்.

பார்க்கிங் கட்டணத்தை எப்படி மறுக்க முடியும்?

பார்க்கிங் கட்டணத்தில் நீங்கள் உடன்படவில்லை என்றால், customerservice@salik.ae என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 800-Salik-ஐ தொடர்பு கொள்ளவும். மேலும், அல்லது சாலிக் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் ஒன்றைப் பார்வையிட்டு மறுப்பு தெரிவிக்கலாம்.

சாலிக் டேக்கை எங்கே வாங்குவது?

நீங்கள் www.salik.ae இலிருந்து ஆன்லைனில் சாலிக் டேக்கை வாங்கலாம் அல்லது Careem Quick அல்லது UAE முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் மூலம் வாங்கலாம்.

சாலிக் கணக்கிலிருந்து கழிப்பதற்குப் பதிலாக தனியாகச் செலுத்தலாமா?

இல்லை, துபாய் மால் பார்க்கிங் கட்டணம், வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள சாலிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

பார்க்கிங் கட்டணத்தில் அதிகபட்ச வரம்பு உள்ளதா?

ஆம், துபாய் மாலில் பார்க்கிங் கட்டணம் 24 மணி நேர பார்க்கிங்கிற்கான அதிகபட்ச வரம்பான 1,000 திர்ஹம்சை அடையும் வரை படிப்படியாக அதிகரிக்கிறது, அதன் பிறகு துபாய் மால், துபாய் போலீஸ் போன்ற அதிகாரிகளிடம் மீறும் வாகனத்தை புகாரளிக்கும் உரிமையை கொண்டுள்ளது.

பார்க்கிங் அபராதத்தை எங்கே செலுத்துவது?

உங்கள் சாலிக் கணக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டவுடன் நிலுவையில் உள்ள பார்க்கிங் பரிவர்த்தனைகள் தானாகவே கழிக்கப்படும். உங்கள் வாகனத்தை துபாய் மால் பார்க்கிங்கில் 24 மணி நேரத்திற்கும் மேலாக விட்டுச் சென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் (துபாய் காவல்துறை) படி விதிமீறல்கள் இருக்கும், மேலும் நீங்கள் அவர்களின் சேனல்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel