ADVERTISEMENT

அமீரகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் வெளியீடு..!!

Published: 14 Jun 2024, 8:34 AM |
Updated: 14 Jun 2024, 8:35 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதாவிற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஈதை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஈத் அல் அதாவை முன்னிட்டு அமீரக அரசானது நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி ஈத் அல் அதாவிற்கு முன்னர் வரும் அரஃபா நாள் நாளை (சனிக்கிழமை) என்றும் ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

மேலும், ஹஜ் பெருநாளின் போது அமீரகம் முழுவதும் சூரிய உதயத்திற்கு பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெறும். அத்துடன் அனைத்து எமிரேட்களிலும் உள்ள மசூதிகள் மற்றும் முஸல்லாஹ் என்று அழைக்கப்படும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கமாகும்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஈத் அல் அதாவிற்காக நடத்தப்படும் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பல ஆதாரங்களின் அடிப்படையில் அமீரகத்தின் பல்வேறு எமிரேட்டுகளிலும் தொழுகை நடத்தப்படும் நேரங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய்

துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறையின்படி, மசூதிகள் மற்றும் முஸல்லாக்களில் ஹஜ் பெருநாள் தொழுகையானது அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி

அபுதாபியை பொறுத்தவரை ஹஜ் பெருநாள் தொழுகையானது துபாயை ஒப்பிடுகையில் 5 நிமிடங்களுக்குப் பின் அதாவது ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் வெளியிட்டுள்ள இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி அபுதாபி சிட்டியில் அதிகாலை 5.50 மணிக்கு நடத்தப்படும் என்றும் அதுவே அல் அய்னில் அதிகாலை 5.44 மணிக்கு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா

ஷார்ஜாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் படி பெருநாள் தொழுகை அதிகாலை 5.44 மணிக்கு நடைபெறும்

அஜ்மான் மற்றும் உம் அல் குவைன்

அஜ்மானில் பெருநாள் தொழுகையானது அதிகாலை 5.44 மணிக்கும் உம் அல் குவைனில் அதிகாலை 5.43 மணிக்கும் நடத்தப்படும்

ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா

இந்த இரு எமிரேட்டுகளிலும் பெருநாள் தொழுகையானது அதிகாலை 5.41 மணிக்கு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel