அமீரக செய்திகள்

அமீரகத்தில் 100 திர்ஹம்ஸ் சேமிப்பின் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இந்தியர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டவர் ஒருவர், சமீபத்திய தேசிய பத்திரங்கள் (National Bonds) டிராவில் 1 மில்லியன் திர்ஹம்களை வென்று பெறும் அதிர்ஷ்டசாலியாக ஆகியுள்ளார். அமீரகத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த 46 வயதான நாகேந்திரம் பொருகத்தா என்பவர் நேஷனல் பாண்டில் பணத்தை சேமித்து வரும் நிலையில், அதன் டிராவில் பங்கேற்கும் வாயப்பை பெற்றதுடன் அதில் வெற்றியையும் பெற்றுள்ளார்.

18 வயது மகள் மற்றும் 14 வயது மகன் என இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நாகேந்திரம், கடினமாக உழைப்பது மட்டுமல்லாமல் பணத்தை சேமிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். எனவே 2019ம் ஆண்டு முதல் தேசிய பத்திரங்களில் நேரடி டெபிட் மூலம் ஒவ்வொரு மாதமும் 100 திர்ஹம் என பணத்தை சேமித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

தனது குடும்பத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவதற்காக 2017 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த இவர், தனது சேமிப்பு நடைமுறைகள் மற்றும் அவரது குடும்ப நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக தற்போது டிராவில் ஒரு மில்லியன் திர்ஹம்ஸை வென்ற அதிர்ஷ்டாசாலியாக அறிவிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், “இது உண்மையிலேயே மிகப்பெரியது. எனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும், எனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கவும் நான் ஐக்கிய அரபு அமீரகம் வந்தேன். இந்த நிலையான சேமிப்பு உத்தி எனக்கு பலனளித்துள்ளது. இந்த வெற்றியை மிக உண்மையானதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் கல்விக்கான எனது நீண்டகால கணவுகளை நிறைவேற்றுவதற்கும் தேசிய பத்திரங்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று, 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற டிராவில் அப்துல்லா அலி எனும் எமிராட்டியர் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வென்ற அதிர்ஷ்டசாலி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!