ADVERTISEMENT

UAE: ஒரு மாத கால ‘சம்மர் சூப்பர் சேல்’-ஐ தொடங்கிய லுலு குழுமம்.. 11 மால்களில் 90% வரை தள்ளுபடி.. பல பரிசுகளும் அறிவிப்பு..!!

Published: 1 Jun 2024, 6:08 PM |
Updated: 1 Jun 2024, 6:12 PM |
Posted By: admin

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லுலு குரூப் இன்டர்நேஷனலின் (lulu group) முதன்மையான சில்லறை விற்பனைப் பிரிவான லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் பிராப்பர்ட்டி (LIP), அதன் வருடாந்திர தள்ளுபடி பிரச்சாரத்தை நேற்று மே 31 ஆம் தேதியன்று தொடங்குவதாக அறிவித்துள்ளது. லுலு குழுமத்தின் இந்தப் பிரச்சாரத்தில் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள 11 ஷாப்பிங் மால்கள் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 30 வரை நடைபெறவுள்ள இந்த ஒரு மாத கால கோடைகால விற்பனையில் சுமார் 11 ஷாப்பிங் மால்களில் பல்வேறு தயாரிப்புகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், ஷாப்பிங் செய்பவர்கள்  டூர் பேக்கேஜ்கள், கோல்டு வவுச்சர்கள் மற்றும் மூன்று கார்களின் மெகா பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்றும் லுலு குழுமத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, மாலில் உள்ள எந்த கடையிலும் 200 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர் சேவை மையத்தில் தங்கள் ரசீதுகளை சமர்ப்பிப்பதன் மூலம் தொடர்ச்சியான ரேஃபிள் டிராக்களில் நுழைய தகுதி பெறுவார்கள் என லுலு நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் ஒரே மாலில் உள்ள வெவ்வேறு கடைகளின் பில்களை ஒருங்கிணைத்து 200 திர்ஹம்ஸ் ரசீதை காண்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

ரேஃபிள் குலுக்கல் வாரத்திற்கு ஒருமுறை ஜூன் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், ஒவ்வொரு தேதியிலும் ஏழு டூர் பேக்கேஜ்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. வெற்றியாளர்கள் கென்யா, போஸ்னியா, இலங்கை, ஜார்ஜியா, பாலி, ஃபூகெட், பாங்காக், அம்மான், கெய்ரோ, அல்மாட்டி, பாகு மற்றும் அஜர்பைஜான் போன்ற இடங்களுக்கு பயணிக்கும் வாயப்பை பெறுவார்கள் என்றும், மேலும், மூன்று அதிர்ஷ்டசாலிகள் ஜூன் 30 அன்று புத்தம் புதிய கார்களை பம்பர் பரிசாக வெல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தில் பங்கேற்கும் மால்கள்:

  1. அல் வஹ்தா மால், அபுதாபி
  2. முஷ்ரிஃப் மால், அபுதாபி
  3. கலிதியா மால், அபுதாபி
  4. அல் ரஹா மால், அபுதாபி
  5. மஸ்யாத் மால், அபுதாபி (MBZ சிட்டி)
  6. ஃபோர்சன் சென்ட்ரல் மால், அபுதாபி (கலிஃபா சிட்டி)
  7. அல் ஃபலாஹ் சென்ட்ரல் மால், அபுதாபி (அல் ஃபலாஹ் சிட்டி)
  8. மதீனத் சயீத் ஷாப்பிங் & கோல்ட் சென்டர், அபுதாபி
  9. பராரி அவுட்லெட் மால், அல் அய்ன்
  10. அல் ஃபோஹ் மால், அல் அய்ன்
  11. அல் தஃப்ரா மால், அல் தஃப்ரா சிட்டி

மேலும், இந்த 11 மால்களின் அனைத்து குத்தகைதாரர்களும் இந்த சம்மர் சூப்பர் சேல் பிரச்சாரத்தில் பங்கேற்பதாகவும், அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் அருமையான ஒப்பந்தங்கள், வெகுமதிகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் LIP இன் இயக்குனர் வஜேப் அல் கௌரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel