ADVERTISEMENT

போலி பாஸ்போர்ட்டில் துபாய் வரும் வெளிநாட்டினர்கள்.. இந்தாண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 366 பேர் கைது..!!

Published: 3 Jun 2024, 2:43 PM |
Updated: 3 Jun 2024, 2:43 PM |
Posted By: admin

பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி விமான பயணத்தை சுமூகமாகவும் எளிதாகவும் மாற்றுவதற்கு பல யுக்திகளை துபாய் சர்வதேச விமான நிலையம் பயன்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்வதிலும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகின்றது. அதன்படி பயணத்தடை உள்ளிட்ட ஒரு சில சிக்கல்கள் கொண்டவர்களை கண்டறிவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களையும் துபாய் விமான நிலையம் பிடித்து வருகிறது.

ADVERTISEMENT

அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) உள்வரும் 350 க்கும் மேற்பட்ட பயணிகள் போலி பாஸ்போர்ட்களை வைத்திருந்ததாக துபாயில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) தெரிவித்துள்ளது. GDRFA இன் படி, 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 366 நபர்கள் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பிடிபட்டுள்ளனர் என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 355 பேர் பிடிக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, மொத்தம் 16,127 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 1,232 ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு வழக்கின் பிரத்தியேகங்களின் அடிப்படையில் 443 வழக்குகள் மேல் நடவடிக்கைக்காக பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் செய்தியாளர்களிடம் பேசிய ஆவணத் தேர்வு மையத்தின் ஆலோசகர் அகில் அஹ்மத் அல்நஜ்ஜார் கூறுகையில், சட்டவிரோத பாஸ்போர்ட்டுகளை கொண்டு துபாய்க்குள் நுழைய முயற்சிக்கும் மோசடியாளர்களைப் பிடிக்க GDRFA சிறப்பான அமைப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாய் விமான நிலைய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கவுண்டரிலும் ரெட்ரோ செக் எனப்படும் மேம்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது சந்தேகத்திற்குரிய போலி பாஸ்போர்ட்களை ஆராயும் எனவும் கூறியுள்ளார். மேலும் “இந்த இயந்திரங்கள் பயனுள்ள ஃபயர்வாலாக செயல்படுகின்றன, இது இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு போலி பாஸ்போர்ட்களை சரிபார்த்து கண்டறிய உதவுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போலி பாஸ்போர்ட்டைக் கண்டறியும் இயந்திரம்

ADVERTISEMENT

இதன்படி சந்தேகத்திற்குரிய பாஸ்போர்ட் ஒரு பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரியால் கண்டறியப்பட்டதும், அது சரிபார்ப்பதற்காக ஆவணத் தேர்வு மையத்திற்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel