இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று வியாழக்கிழமை இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் கடைசி மாதமான துல் ஹஜ், நாளை ஜூன் 7 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
அதன்படி, வரும் ஜூன் 15, சனிக் கிழமை அரஃபா நாள் தினமாகவும், அதற்கு அடுத்த நாள் ஜூன் 16, ஞாயிற்றுக் கிழமை அன்று ஈத் அல் அதா பெருநாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் இரண்டு பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா என்பது, இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபி தனது மகன் இஸ்மாயிலை இறைவனின் கட்டளைப்படி தியாகம் செய்ய விரும்பியதை நினைவுபடுத்தும் தியாக திருநாளாக உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
BREAKING | The crescent moon has been sighted in Saudi Arabia. Dhul Hijjah 1445 (2024) has commenced. #Hajj #HaramainInfo pic.twitter.com/5HpkNjLTUV
— 𝗛𝗮𝗿𝗮𝗺𝗮𝗶𝗻 (@HaramainInfo) June 6, 2024
ஐக்கிய அரபு அமீரகமும் சவுதியையே பின்பற்றும் என்பதால் அமீரகத்திலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel