ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ‘ஈத் அல் அதா’ விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!

Published: 8 Jun 2024, 8:22 PM |
Updated: 8 Jun 2024, 8:22 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் 16ம் தேதி ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஈத் அல் அதாவிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை அமீரக அரசு தற்போது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) இது குறித்து தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனியார் துறைக்கான ஈத் அல் அதா விடுமுறை நாட்கள் ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்கிழமை வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பொதுத்துறை ஊழியர்களும் அதே தேதிகளில் விடுமுறையை கொண்டாடுவார்கள் என்றும் MoHRE குறிப்பிட்டுள்ளது.

ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, அரபா தினத்தை குறிக்கும் துல் ஹஜ் 9, ஜூன் 15ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு வைப்பது வழக்கமாகும். அதனை தொடர்ந்து அடித்த நாளான ஜூன் மாதம் 16ம் தேதி ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடப்படும். மேலும் அந்நாளில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் நடத்தப்படும் சிறப்பு தொழுகையிலும் கலந்து கொள்வார்கள்.

ADVERTISEMENT

துல்ஹிஜ்ஜா 10 முதல் 12 வரை அல்லது கிரிகோரியன் நாட்காட்டியில் ஜூன் 16 முதல் 18 வரை அனுசரிக்கப்படும் தியாகத் திருவிழாவான ஈத் அல் அதாவுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஹிஜ்ரி காலண்டரின் ஆண்டு 1445 துல் ஹஜ் மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிறை கடந்த ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை அபுதாபியில் பார்க்கப்பட்டதை தொடர்ந்து ஈத் அல் அதாவிற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel