அமீரகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவை அமீரக தலைவர்கள் மேற்கொண்டு வருவர். அதே போல் இன்னும் ஓரிரு நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறை கைதிகளை விடுவிக்க அமீரக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி ஈத் அல் அதாவை முன்னிட்டு, 1,138 கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆவர். இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவானது கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அபராதங்கள் மற்றும் தண்டனைகளையும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் துபாய் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் ஈத் அல் அதாவை முன்னிட்டு 686 சிறைகைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இவரைப் போன்றே ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா போன்ற மற்ற எமிரேட்டுகளின் தலைவர்களும் ஈத் அல் அதாவை முன்னிட்டு சிறைகைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரைவை வெளியிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel