ADVERTISEMENT

மக்களுக்கு ஈத் அல் அதாவிற்கான வாழ்த்துகளை பகிர்ந்த அமீரக தலைவர்கள்..!!

Published: 16 Jun 2024, 9:53 AM |
Updated: 16 Jun 2024, 9:55 AM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஈத் அல் அதாவை சிறப்பு பெருநாள் தொழுகையின் ஆரம்பத்துடன் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் அதாவிற்கான வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கையில், “எனது சகோதரர்கள், எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள், குடிமக்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் அல் அதாவிற்கான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அனைவருக்கும் அமைதியை அளித்து, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வோடு நம்மை ஒன்றிணைக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அண்டை நாடுகளின் தலைவர்கள் பலருடன் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஜனாதிபதி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் GCC தலைவர்கள் இந்த  சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரவேண்டும் என்றும் தங்கள் நாடுகளிலும் நாட்டு மக்களிலும் நன்மை மற்றும் நல்வாழ்வு நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் இந்த நன்னாளில் குடியிருப்பாளர்களுக்கும் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கும் தனது ஈத் அல் அதா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர், தான் வழிபாட்டாளர்கள் பிரார்த்தனை செய்வது போன்று வீடியோ வெளியிட்டு வாழ்ததுகளை பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel