ADVERTISEMENT

அபுதாபியில் சுத்தத்தை கடைபிடிக்காத இரண்டு உணவகங்கள் அதிரடியாக மூடல்..!! அதிகாரிகள் நடவடிக்கை..!!

Published: 18 Jul 2024, 7:18 PM |
Updated: 18 Jul 2024, 7:18 PM |
Posted By: admin

அபுதாபியில் குடியிருப்பாளர்களின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையில், உணவு தயாரிக்கும் இடங்களில் பல மீறல்களுக்கு உள்ளாகிய இரண்டு உணவகங்கள் அபுதாபியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி எமிரேட்டின் தொழில்துறை சந்திப்பில் அமைந்துள்ள பங்களா சிற்றுண்டி உணவகம் மற்றும் தர்பார் எக்ஸ்பிரஸ் உணவகம் என பெயர் கொண்ட இந்த இரண்டு உணவகங்களும், உணவு பாதுகாப்பை கடைபிடிக்காத குற்றத்திற்காக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த உணவகங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டதாக உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உணவு வழங்கப்படும் போது வெப்பநிலை கட்டுப்பாடை கடைபிடிக்காதது, உணவகங்கள் தரையையும் மேற்பரப்புகளையும் சுத்தமாக வைத்திருக்காதது, அத்துடன் ஊழியர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணியாமல் உணவைத் தொடுவது போன்றவை சுகாதார நடவடிக்கைகளை மீறும் செயல்கள் எனவும் அபுதாபி உணவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT