அபுதாபியில் ஏற்படக்கூடிய மோசமான சாலை விபத்துகள் குறித்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடும் அபுதாபி காவல்துறையானது, அபுதாபியில் சமீபத்தில் இரண்டு பரபரப்பான சாலையில் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக பாதைகளை மாற்றியதால் ஏற்பட்ட இரண்டு பயங்கரமான விபத்துகள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அபுதாபி காவல்துறை வெளியிட்ட வீடியோவில் கவனக்குறைவாக பாதைகளை மாற்றுவதால் ஏற்படும் தீங்கு குறித்து வெளியிட்டதுடன் வாகன ஓட்டிகளை இது போன்று கவனக்குறைவாக வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. அபுதாபி காவல்துறை வெளியிட்ட 49 வினாடிகள் கொண்ட கிளிப்பில், ஓட்டுநர்கள் தங்கள் பாதைகளில் தொடர்ந்து தங்கியிருந்தால் அல்லது பாதை மாறுவதற்கு முன் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கூட இரண்டு விபத்துகளை தவிர்த்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
#فيديو | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز المتابعة والتحكم وضمن مبادرة “لكم التعليق” فيديو لحوادث بسبب الانحراف المفاجئ وعدم الإلتزام بخط السير الإلزامي . #لكم_التعليق#الانحراف_المفاجئ pic.twitter.com/Gv9SWNPYwo
— شرطة أبوظبي (@ADPoliceHQ) July 5, 2024
முதலாவதாக செடான் கார் ஒன்று, வலதுபுறம் வெளியேறும் பாதையில் செல்ல முயன்றபோது, எந்த இண்டிகேட்டரையும் பயன்படுத்தாமல் மூன்று பாதைகளை கடந்ததால், மற்ற பாதையில் சரியாக சென்று கொண்டிருந்த இரண்டு டிரக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் கார் மாட்டிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, விபத்துக்குள்ளாகிய கார் மற்றொரு செடான் வகை காரில் மோதி அந்த காரையும் கடும் விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
இரண்டாவது சம்பவத்தில், ஒரு SUV கார் திடீரென்று இண்டிகேட்டர்களை பயன்படுத்தாமல் பாதைகளை மாற்றியதால் வேகமான பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு பிக்கப் டிரக்கில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்கப்பின் ஓட்டுநர் டயரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையின் குறுக்கே தடம்புரண்டு மீண்டும் எஸ்யூவியில் மோதி கடும் விபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு திடீரென பாதை மாற்றி ஓட்டுவது 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்டுகளுக்கு வழிவகுக்கக்கூடிய தண்டனைக்குரிய கடுமையான போக்குவரத்து குற்றமாகும். அதே சமயம் தவறாக முந்திச் செல்வதற்கான அபராதம் 600 திர்ஹமில் தொடங்கி குற்றத்தைப் பொறுத்து 1,000 திர்ஹம் வரை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel