ADVERTISEMENT

அமீரக டிரான்ஸிட் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா..?? எப்படி..?? கட்டணம் எவ்வளவு..?? முழுவிபரங்களும்..!!

Published: 20 Jul 2024, 7:10 PM |
Updated: 20 Jul 2024, 7:11 PM |
Posted By: admin

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிக்கும் வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக செல்ல வேண்டியிருந்தால் சில நேரங்களில் நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த சமயத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் அதற்குள்ளேயே அந்த குறிப்பிட்ட பொழுதை போக்க வேண்டியிருக்கும். அதுவே அந்த காலத்தை விமான நிலையத்தை விட்டு அமீரக நகரங்களில் பொழுதை கழிக்க விரும்பினால் அதற்கு நீங்கள் ஒரு டிரான்சிட் விசாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்கள் மூலம் மட்டுமே இந்த டிரான்ஸிட் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த விசா அமீரகத்திற்குள் நுழைவதற்கு முன்பு செயலாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் டிரான்ஸிட் விசாவிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தால், அதை எப்படி செய்வது என்பது குறித்த விரிவான தகவல்களை கீரே காணலாம்.

டிரான்ஸிட் விசா

80 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள குடிமக்கள் 30 அல்லது 90 நாட்களுக்கு டிரான்ஸிட் விசா இல்லாமல் தங்கலாம். கூடுதலாக, இந்திய குடிமக்களில்

ADVERTISEMENT
  • USA வழங்கிய விசிட் விசா 
  • USA வழங்கிய கிரீன் கார்டு
  • UK வழங்கிய ரெசிடென்ஸி விசா
  • ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ரெசிடென்ஸி விசா

மேற்கண்ட விசா வைத்திருப்பவர்களில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விசா அல்லது கிரீன் கார்டு செல்லுபடியாகும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த நாளிலிருந்து அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு, முன் அங்கீகரிக்கப்பட்ட விசாவைப் (pre approved visa) பெறலாம்.

மேற்கண்டவாறு விசா இல்லாத நுழைவு அல்லது முன்-அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுக்கு நீங்கள் தகுதி பெறவில்லை என்றால், நீங்கள் டிரான்சிட் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அது இரண்டு பிரிவில் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

டிரான்சிட் விசா வகைகள்

  • 48 மணிநேரத்திற்கான டிரான்ஸிட் விசாக்கள்
  • 96 மணிநேரத்திற்கான டிரான்ஸிட் விசாக்கள்

48 மணிநேரத்திற்கான டிரான்ஸிட் விசாக்கள்

இந்த விசாவைப் பெற ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் மூலம் நீங்கள் விசாவிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த விசாவை நீட்டிக்கவோ புதுப்பிக்கவோ முடியாது. விசாவின் செல்லுபடியாகும் காலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதிலிருந்து 48 மணிநேரம் ஆகும். அதாவது நீங்கள் நாட்டிற்குள் வந்த நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

செலவு:

  • எமிரேட்ஸ் பயணிகளுக்கு – 37 திர்ஹம்ஸ்
  • எதிஹாட் பயணிகளுக்கு – 55 திர்ஹம்

96 மணிநேரத்திற்கான டிரான்ஸிட் விசாக்கள்

48 மணிநேர டிரான்ஸிட் விசாவைப் போலவே, நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் மூலம் முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த விசாவை நீட்டிக்கவோ புதுப்பிக்கவோ முடியாது. விசாவின் செல்லுபடியாகும் காலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைந்ததிலிருந்து 96 மணிநேரம் ஆகும். இந்த காலத்திற்குப் பின் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

செலவு:

  • எமிரேட்ஸ் பயணிகளுக்கு – 179 திர்ஹம்ஸ்
  • எதிஹாட் பயணிகளுக்கு – 216 திர்ஹம்ஸ்

டிரான்ஸிட் விசாவிற்கு தேவையான ஆவணங்கள்

  • குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணம்.
  • வெள்ளை பின்னணியில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • நீங்கள் புறப்பட்ட இடத்தைத் தவிர்த்து, மூன்றாவது இடத்திற்கு செல்ல வேண்டியதற்கான டிக்கெட் முன்பதிவு.

டிரான்ஸிட் விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்கள் மூலம் டிரான்ஸிட் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த செயல்முறையை ஆன்லைனிலேயே செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.

  • உங்கள் டிக்கெட் முன்பதிவுகளை முடிக்கவும்.
  • விமான நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் டிக்கெட் முன்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ‘டிரான்சிட் விசாவிற்கு விண்ணப்பிக்கவும்’ என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். மற்ற விமான நிறுவனங்களிடம் இருந்து வரும் விமானங்களை உள்ளடக்கிய பயணத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், நீங்கள் பயணிக்கும் அதே விமான நிறுவனத்தில் டிரான்சிட் விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வது ஒரே டிக்கெட்டில் (PNR) இருக்க வேண்டும்.
  • உங்கள் ட்ரான்ஸிட் விசாவிற்கான கட்டணத்தைச் செலுத்தியவுடன், அது விமான நிறுவனங்களால் வழங்கப்படும்.

பயண முகவர் மூலம் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், அவர்கள் டிரான்ஸிட் விசாவைப் பெறுவதற்கும் உதவலாம், ஆனால் அனைத்து விசாக்களும் விமான நிறுவனம் மூலமே அனுப்பப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel