ADVERTISEMENT

பாஸ்போர்ட் முடிய 6 மாதம் இருக்கும் போது அமீரகத்தில் விசாவை புதுப்பிக்க முடியுமா..?? நிபுணர்கள் கூறுவது என்ன..??

Published: 25 Jul 2024, 8:53 PM |
Updated: 1 Jan 2025, 5:58 PM |
Posted By: admin

அமீரகத்தில் வசித்து வரும் நபர்கள் ரெசிடென்ஸி விசாவை புதுப்பிக்க திட்டமிடுகிறீர்களா? நீங்கள் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​உங்கள் பாஸ்போர்ட் ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும். ஏனெனில், ரெசிடென்ஸி விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க பல வழிகள் இருந்தாலும், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் 180 நாட்களுக்கு மேல் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் என விசா செயலாக்க நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

அதாவது, துபாயின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFAD) விதிகளின்படி, விசா புதுப்பித்தல் அல்லது புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் பாஸ்போர்ட் 180 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும் என அரசாங்க பரிவர்த்தனை மையம் ஒன்றின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே உங்கள் பாஸ்போர்ட் ஆறு மாதங்களுக்குள் காலாவதியாகப் போகிறது என நீங்கள் கண்டால், முதலில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது நல்லது என்று ஆவணங்களை சரிபார்க்கும் கிளியரிங் நிர்வாக அதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்கள் நாட்டின் தூதரகம் மூலம் அல்லது ஆன்லைன் மூலம் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் உங்கள் பாஸ்போர்ட் செல்லுபடியை முன்கூட்டியே சரிபார்த்து பாஸ்போர்ட் விரைவில் காலாவதியாகப் போகிறது என்பதை நீங்கள் அறிந்தால், சில தூதரகங்கள் அல்லது துணைத் தூதரகங்கள் புதிய பாஸ்போர்ட்டை வழங்க அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க, அதை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT