துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கீழ் மெட்ரோ, டிராம், பஸ் என பல்வேறு போக்குவரத்து முறைகளில் துபாய் அரசானது பொதுப் போக்குவரத்தை திறன்பட கையாண்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது RTA 1.1 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் பல்வேறு அளவுகளில் 636 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் குறைந்த கார்பன் உமிழ்வுக்கான ஐரோப்பிய குறிப்புகளுக்கு இணங்குகின்றன (Euro 6) என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 40 மின்சார பேருந்துகளாக இருக்கும் என்றும் இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய மற்றும் முதல் முறையாக அதிகளவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து விநியோகம் 2024 மற்றும் 2025 இல் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர், துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் இயக்கத்தை எளிதாக்கும் நிலையான மற்றும் நெகிழ்வான பொது போக்குவரத்து அமைப்பை நிறுவுவதே இதன் நோக்கமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மேற்பார்வையின் கீழ், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவது, சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக துபாயின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பது மற்றும் துபாய் நகர்ப்புற திட்டம் 2040 இலக்குகளை அடைவது ஆகியவை இந்த முயற்சியின் நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகளின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான அமீரகத்தின் இலக்கை ஆதரிக்கின்றன, அதே போல் துபாயின் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33ன் கீழ் துபாயை உலகின் மிகப்பெரிய நகர்ப்புற பொருளாதாரங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி RTA, நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், இயக்குநர் ஜெனரல், Mattar Al Tayer கூறுகையில்: “இந்த புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வது, துபாயில் உள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பொதுப் போக்குவரத்து பயனர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்குவதும், பொதுப் பேருந்துப் பயணிகளின் நிலையான வளர்ச்சிக்கு இடமளிப்பதுமே எங்கள் இலக்காகும். 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுப் போக்குவரத்து பயணங்களின் பங்கை 25% ஆக அதிகரிப்பதற்கு, பொதுப் போக்குவரத்தை விரும்பத்தக்க இயக்கமாக மாற்றுவதற்கான RTA இன் உறுதியை இந்த ஒப்பந்தம் விளக்குகிறது” என தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, ஒப்பந்தத்தில் Zhongtong இலிருந்து 40 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 400 MAN பேருந்துகள் மற்றும் 50 Zhongtong பேருந்துகள் உட்பட 450 நகர சேவை பேருந்துகள், அனைத்தும் உயர் பாதுகாப்பு, வசதி மற்றும் தரமான தரநிலைகள் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் கூறுகையில் “பேருந்து பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஓட்டுநர் நடத்தையை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் பெரும்பாலான பேருந்துகளில் டிரைவர் நடத்தை கண்காணிப்பு அமைப்பு (Raqeeb) பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் உண்மையான பயணிகளின் எண்ணிக்கையைப் பதிவுசெய்வதற்கும், கட்டண ஏய்ப்பைத் தடுக்க, தானியங்கி கட்டண வசூல்களுடன் அவற்றைப் பொருத்துவதற்கும், தானியங்கி பயணிகள் எண்ணிக்கை (APC) அமைப்பும் இதில் இடம்பெறும். இயக்க முறைமையுடன் இணைக்கப்பட்ட மின்னணு ஓட்டுனர் அடையாள அங்கீகார அமைப்பும் உள்ளது. பேருந்துகளில் வசதியான இருக்கைகள், உயர் பாதுகாப்புத் தரங்கள், குடும்பப் பகுதிகளில் சரிசெய்யக்கூடிய சீட் பெல்ட்கள் மற்றும் துபாயின் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவையும் உள்ளன” என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel