ADVERTISEMENT

வெறும் 6 மாதங்களில் 57 மில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்த துபாய் மால்..!!

Published: 13 Jul 2024, 6:18 PM |
Updated: 14 Jul 2024, 11:45 AM |
Posted By: admin

2023 ஆம் ஆண்டில் பூமியில் மக்கள் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக பெயர் எடுத்த துபாய் மால் தற்பொழுது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டிலும் பார்வையாளர்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை துபாய் மால் எட்டியுள்ளது. இதன்படி  ஆண்டின் முதல் பாதியில் 57 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவுசெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 52 மில்லியன் பார்வையாளர்கள் துபாய் மாலுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளின் செயல்திறனிலும் இதேபோன்ற வளர்ச்சியை துபாய் மால் கண்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சில்லறை விற்பனையில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த எமாரின் நிறுவனர் மொஹமத் அலப்பர் “இந்த வளர்ச்சி எங்கள் குழு மற்றும் கூட்டாளிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. துபாய் மால், சில்லறை விற்பனை மற்றும் ஓய்வுநேரங்களில் புதிய வரையறைகளை அமைத்து, உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கானவர்களை ஈர்க்கிறது. ஒரு முதன்மையான உலகளாவிய இடமாக அதன் நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்தும் வகையில், மாலின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாய் மால் 2023 இல் பூமியில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக 105 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவுசெய்து சாதனை புரிந்திருந்தது. இது முந்தைய ஆண்டை விட 19 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த சாதனையானது வலுவான விற்பனையுடன் சில்லறை மற்றும் பொழுதுபோக்கு நிலப்பரப்பில் மாலின் முக்கிய பங்கைக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT