ADVERTISEMENT

கோடைகாலத்தை முன்னிட்டு இலவச கார் பரிசோதனை சேவையை வழங்கும் துபாய் காவல்துறை..!!

Published: 8 Jul 2024, 6:26 PM |
Updated: 8 Jul 2024, 6:49 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக ஒரு சில சமயங்களில் கார் விபத்துக்களின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் டயர் வெடிப்புகள் விபத்துக்களுக்கு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், தீ விபத்துகள் போன்ற பிற சம்பவங்களும் மரண விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

எனவே வாகன ஓட்டிகள் தொடர்ந்து தங்களின் கார்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை அவ்வப்போது சரிபார்க்க கார்களை சர்வீஸ் செய்வது அவசியமாகும். இவ்வாறு வாகன ஓட்டிகளின் நலன் மற்றும் சமூக நலன் கருதி துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு ஆகஸ்ட் இறுதி வரை இலவச கார் பரிசோதனை சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து தனியார் கார் உரிமையாளர்களும் அமீரகம் முழுவதும் அமைந்துள்ள AutoPro மையங்களுக்குச் சென்று இந்தச் சேவையிலிருந்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

AutoPro மையங்களில் பெறக்கூடிய 10 வாகன சோதனைகள்:

  • ஏசி மற்றும் ஏர் ஃபில்டர்
  • சீட் பெல்ட்களின் நிலை
  • வைப்பர் பிளேடுகளின் நிலை (wiper blades condition)
  • விண்ட்ஷீல்டு வாஷர் திரவம் (Windshield washer fluid)
  • ரேடியேட்டர் குழல்களின் நிலை (radiator hoses condition)
  • பேட்டரி ஆரோக்கியம்
  • என்ஜின் எண்ணெய் மற்றும் குளிரூட்டும் நிலை
  • டயர்கள் அழுத்த நிலை
  • திரவ நிலை (fluids level)
  • விளக்குகள்

துபாய் காவல்துறை, போக்குவரத்து பொதுத் துறை மூலம், ‘விபத்துக்கள் இல்லாத கோடைகாலம்’ எனும் பிரச்சாரத்திற்கு ஏற்ப, கோடை மாதங்களுக்கான மேம்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு முயற்சிகளை அறிவித்துள்ளது. இதன்கீழ் போக்குவரத்துக் கல்வித் துறையின் களக் குழு, டயர்களின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் அவற்றின் செயல்திறனை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது. அத்துடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு குறிப்புகளையும் துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அவை:

  • வாகன ஓட்டிகள் டயர் செல்லுபடியாகும் நிலையில் உள்ளது மற்றும் அதிர்வுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • வாகன ஓட்டிகள் அவ்வப்போது டயர்களில் விரிசல் மற்றும் வீக்கம் போன்று டயர் பெரிதாகி உள்ளதா என சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர்கள் தொடர்ந்து என்ஜின் ஆயிலை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • வாகன ஓட்டிகள் திரவம் கசிவு உள்ளதா என தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
  • வழக்கமான வாகனச் சோதனைகள் சாலையில் விபத்துகளைத் தவிர்க்க முக்கியம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT