ADVERTISEMENT

UAE: கோடைகாலத்தில் இலவசமாக வாகனங்களை பராமரிப்பு செய்வது எப்படி..??

Published: 24 Jul 2024, 6:16 PM |
Updated: 24 Jul 2024, 6:23 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், இந்த அதிகளவு வெப்பமானது உங்களின் வாகனத்தில் அடிக்கடி பழுதை உண்டாக்கலாம். எனவே வழக்கமான பராமரிப்பை விட வாகனத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துவது நல்லதாகும். அதிலும், துபாய் காவல்துறை மற்றும் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் வழங்கும் இலவச டயர் மற்றும் வாகன ஆய்வு சேவைகளைப் பயன்படுத்தி, உங்கள் காரை சிறந்த நிலையில் வைத்திருக்கவும், செயலிழப்புகள் மற்றும் ஆபத்தான விபத்துக்களில் இருந்தும் வாகனங்களை பாதுகாக்கலாம். இந்த இலவச சேவைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

துபாயில் இலவச வாகன சோதனை

துபாய் காவல்துறையானது வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை இலவச கார் ஆய்வு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகம் முழுவதும் உள்ள AutoPro மையங்களில் இந்தச் சேவையை அணுகலாம். இதில் இலவசமாக பின்வரும் 10 ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவை:

  1. பெல்ட்களின் நிலை (belts condition)
  2. ஏசி மற்றும் ஏர் ஃபில்டர் (AC and air filter)
  3. விண்ட்ஷீல்டு வாஷர் ஃப்ளூயட் (Windshield washer fluid)
  4. பேட்டரி நிலைமை
  5. வைப்பர் ப்ளேடு கண்டிஷன் (wiper blade condition)
  6. ரேடியேட்டர் குழல்கள் நிலை (radiator hoses condition)
  7. என்ஜின் எண்ணெய் மற்றும் குளிரூட்டும் நிலைகள் (Engine oil and coolant levels)
  8. டயர் அழுத்தம் மற்றும் நிலை
  9. விளக்குகள்
  10. திரவ நிலை (fluid level)

அஜ்மானில் இலவச டயர் ஆய்வு

அஜ்மான் போக்குவரத்து ஆணையம் கோடைக்காலத்தில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஜூலை 23, செவ்வாய்கிழமை அன்று ‘உங்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை’ என்ற தலைப்பில் இலவச டயர் ஆய்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அஜ்மானின் ஜுர்ஃப் இண்டஸ்ட்ரி 3 இல் உள்ள வேக வாகன சோதனை மற்றும் பதிவு மையத்தில் (SVTRC) செப்டம்பர் 1, 2024 வரை இந்தச் சேவை கிடைக்கும்.

ADVERTISEMENT

வேலை நேரம்: 

  • ஞாயிறு முதல் வியாழன் வரை – காலை 7.30 முதல் இரவு 9 மணி வரை
  • வெள்ளிக்கிழமை – காலை 7.30 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
  • சனிக்கிழமை – மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை

அதிக வெப்பம் தற்போதுள்ள டயர் பிரச்சனைகளை மோசமாக்கும் என்பதால், கோடை காலத்தில் வழக்கமான டயர் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும்

  • வாகனங்களை அடிக்கடி நிறுத்துதல் அல்லது திடீரென ஆக்சிலரேட்டர் கொடுத்தல்.
  • முறையற்ற டயர் சுழற்சி.
  • குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது வாகனத்தை குறுகிய தூரத்திற்கு ஓட்ட தவறுதல்.
  • வாகன உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட டயர் அழுத்தத்தை பராமரிக்காதது.

இது போன்ற செயல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதிக வெப்பநிலை டயர் அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கும், இதனால் அவை விரிவடையும். டயர்கள் தேய்ந்து போயிருந்தாலோ அல்லது சரியாகப் பராமரிக்கப்படாவிட்டாலோ, இது டயர் வெடிப்புகளுக்கு வழிவகுக்கலாம். இதனால் அவை ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்து அபராதம் 500 மற்றும் உங்கள் உரிமத்தில் நான்கு கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel