ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது கூடவே அமீரகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் நாட்களில் மருத்துவ வசதியை பெறுவதற்கான சுகாதார காப்பீடு (health insurance) வழங்கும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ICP இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் உடல்நலக் காப்பீட்டைப் பெற இந்தத் திட்டம் உதவும் என்று அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (ICP) இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறியுள்ளார்.
அதாவது, அமீரகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அவசர காலங்களில் சுகாதார பாதுகாப்பு வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டு நிறுவனங்களின் தொகுப்புகளின் “விலை மற்றும் வெளியீட்டை நிர்வகிக்கும்” மின்னணு தளத்தின் மூலம் உடல்நலக் காப்பீட்டைப் பெறுவதற்கான செயல்முறையை இது தானியங்குபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து ஹெல்த் இன்சூரன்ஸ் வல்லுநர் ஒருவர் தெரிவிக்கையில், இது உள்ளூர் சுகாதார அமைப்புக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கும் பயனளிக்கும் என்றும், அனைத்து பயணிகளுக்கும் காப்பீடு இருப்பது எதிர்பாராத மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கு இது உத்தரவாதமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது, நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பார்வையாளர்களுக்கான அவசரச் செலவுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கூடவே இந்த மருத்துவ காப்பீடு என்ன மாதிரியான சலுகைகளை வழங்குகிறது என்பதை பார்வையாளர்கள் சரிபார்ப்பதும் முக்கியம் என்றும் அவர் கூறயுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவம்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பயணிகள் தங்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்த தருணத்திலிருந்து அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை அறிந்து, இந்தச் சேவையின் ஆதரவுடன் அவர்கள் நாட்டில் தங்குவதை அனுபவிக்க முடியும். திடீரென அவசரநிலை ஏற்பட்டால் பார்வையாளர்கள் எப்போதும் உயர்தர மருத்துவ சேவையை விரைவாக அணுக முடியும்.
இந்த புதிய முயற்சியானது சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக போட்டி விலையைப் பெறும் என்பதால் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தானியங்கி சுகாதாரக் காப்பீட்டு நடைமுறை செயல்படுத்தப்பட்டவுடன், இது போட்டி கவரேஜ் மாற்றுகளை வழங்கும் காப்பீட்டு வழங்குநர்களைத் தேர்வுசெய்ய பார்வையாளர்களை அனுமதிக்கும். இது பயணிகளாகிய அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel