அபுதாபியில் நடைபெற்ற பிரபல பிக் டிக்கெட் லைவ் டிரா தொடர் 264 இல் துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். இவருக்கு வெற்றியை தேடி தந்த 078319 என்ற எண் கொண்ட டிக்கெட்டை கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று வாங்கியுள்ளார்.
பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில் “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மீட்டிங்கில் பிஸியாக இருந்ததால் நேரலை டிராவைப் பார்க்கவில்லை. எனக்கு போன் கால் வரவும் தான் நான் பிக் டிக்கெட்டில் வென்றது தெரியும்” என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிக் டிக்கெட் வாங்கி வருவதாகவும் இந்த டிக்கெட்டினை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த டிராவினை அடுத்து பிக் டிக்கெட்டில் இந்த மாதம் முழுவதும், டிக்கெட்டுகளை வாங்கும் எவரும், ஆகஸ்ட் மாதத்தில் பல ரொக்கப் பரிசுகளில் ஒன்றைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட 12 வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு மற்றும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் இரண்டாம் பரிசு தவிர, 10 மற்ற வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 3 அன்று நேரடி டிராவின் போது தலா 100,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வெல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம் அல்லது அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள ஸ்டோர் கவுண்டர்களைப் பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எப்போதும் போல் விமான நிலையங்களில் உள்ள ஸ்டோர்களில் வாங்கும் போது 2 டிக்கெட் வாங்கினால் கூடுதலாக ஒரு டிக்கெட் என்ற சலுகையும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel