துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அல் கைல் ரோடு மற்றும் ராஸ் அல் கோர் ரோடு உட்பட துபாயின் சில முக்கிய சாலைகளில் இந்த ஆண்டு பெரிய போக்குவரத்து மேம்பாடுகளை செய்துள்ளதால் துபாயில் வாகனம் ஓட்டுவது சீராகவும் பயண நேரம் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் அதே வேளையில் வாகனத் திறனை அதிகரிக்கும் கூடுதல் பாதைகளும் இந்த மேம்பாடுகளில் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. துபாயின் 4 முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து மேம்பாடுகள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.
1. அல் ரெபாத் ஸ்ட்ரீட்டிற்கு செல்லும் Exit 55ஐ விரிவுபடுத்துதல்: மிர்திஃப் (Mirdif) முதல் பிசினஸ் பே (Business Bay) வரை பயணிப்பவர்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றம்
இந்த மேம்பாட்டின் மூலம் 60% பயண நேரம் குறைந்து நான்கு நிமிடங்களில் பிசினஸ் பே கிராசிங்கிற்கு மிர்திஃப்பில் இருந்து பயணம் செய்யலாம். கடந்த ஜூலை 24 அன்று, ஷேக் முகமது பின் சயீத் சாலையில் (E311) போக்குவரத்து மேம்பாடுகளை முடித்துவிட்டதாக RTA அறிவித்திருந்தது. இதில் அல் ரெபாத் ஸ்ட்ரீட்டிற்கு செல்லும் எக்சிட் 55 இன் மேற்பரப்பு விரிவாக்கம் மற்றும் ஒரு புதிய பாதை சேர்க்கப்பட்டு, மொத்த பாதைகளின் எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு வந்தது ஆகியவை அடங்கும். இதன் மூலம் மிர்திஃபில் இருந்து பிசினஸ் பேக்கு வழக்கமாகப் பயணம் செய்யும் நபர்களுக்கு சமீப நாட்களில் பயண நேரங்கள் மிகவும் குறுகியதாக இருப்பதை அறியலாம்.
2. அல் கைல் சாலை விரிவாக்கம்: அல் ஜதஃப் மற்றும் பிசினஸ் பேயில் போக்குவரத்து சீரமைப்பு
இந்த மேம்பாட்டினால் போக்குவரத்து நெரிசலில் 25 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மே 16, 2024 அன்று RTA ஆல் முடிக்கப்பட்ட முக்கிய சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக அல் ஜதஃப் பகுதியிலும் அல் கைல் சாலையிலும் அதிகளவு நெரிசல் இல்லாமல் சீரான பயணத்தை அனுபவிக்க முடியும்.
பெரிய மாற்றங்கள்
- தேராவை நோக்கிய போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்க புதிய பாதையைச் சேர்ப்பதன் மூலம் அல் கைல் சாலையை அல் ஜதஃப்பில் 600 மீட்டருக்கு மேல் விரிவுபடுத்துதல்.
- இரண்டாவதாக, புதிய 435-மீட்டர் பாதையைச் சேர்ப்பதன் மூலம் பிசினஸ் பே நுழைவாயிலில் அல் கைல் சாலையை விரிவுபடுத்துதல்.
முக்கிய பலன்கள்
- புதிய பாதைகள் சேர்ப்பு: இதனால் பாதைகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
- போக்குவரத்து நெரிசல் குறைந்தது: ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2,000 வாகனங்கள் என்ற கணக்கில் சாலையின் திறனை அதிகரித்து நெரிசலை 25 சதவீதம் குறைத்துள்ளது.
- அல் கைல் சாலையில் இருந்து பிஸ் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் அபுதாபியின் திசையில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துதல்.
3. ராஸ் அல் கோர் சாலை விரிவாக்கம்: விரைவான பயண நேரம்
போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய பீக் ஹவர்ஸில் பயண நேரம் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. மார்ச் 2024 இல் நிறைவடைந்த ராஸ் அல் கோர் சாலை விரிவாக்கம் பு கத்ரா சந்திப்பிலிருந்து அல் கைல் சாலை சந்திப்பு வரை நீண்டுள்ளது.
பெரிய மாற்றங்கள்
மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் திட்டம் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு திசைகளிலும் உள்ள பாதைகளின் (lane) எண்ணிக்கை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்துள்ளது.
முக்கிய பலன்கள்
வாகனங்களின் திறன் ஒரு மணி நேரத்திற்கு 6,000-ல் இருந்து 8,000 வரை அதிகரித்துள்ளது. அதிக போக்குவரத்து நேரங்களில் பயண நேரத்தை 33 சதவீதம் வரை குறைத்துள்ளது.
4. அல்ஜீரியா ஸ்ட்ரீட் மாற்றம்: முஹைஸ்னா மற்றும் அல் மிஜாரில் விரைவான போக்குவரத்து
இந்த ஆண்டின் தொடக்கத்தில், RTA, துபாயின் மிகவும் பிரபலமான சுற்றுப்புறங்களில் ஒன்றான முஹைஸ்னா மற்றும் அல் மிசார் ஆகிய இடங்களில் முக்கிய போக்குவரத்து மேம்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. இந்த மேம்பாட்டின் அல் கவானீஜ் ஸ்ட்ரீட் மற்றும் துனிஸ் ஸ்ட்ரீட் இடையே பயண நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
பெரிய மாற்றங்கள்
அல்ஜீரியா ஸ்ட்ரீட் மற்றும் அல் கவானீஜ் ஸ்ட்ரீட் (சவுத்) இன்டர்செக்ஷனில் இருந்து அல் முஹைஸ்னா 1 மற்றும் அல் மிசார் 1 இல் துனிஸ் ஸ்ட்ரீட் (நார்த்) இன்டர்செக்ஷன் வரை 2 கி.மீ
சாலை விரிவாக்கம்: அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டிற்கு அருகிலுள்ள ஸ்ட்ரீட் 11 இன் இன்டர்செக்ஷனில் இருந்து துனிஸ் தெரு மற்றும் தெருக்கள் 27 மற்றும் 31 உடன் இன்டர்செக்ஷன் வரை அல்ஜீரியா ஸ்ட்ரீட்டை விரிவுபடுத்துதல்.
கூடுதல் பாதைகள் (lane): அல்ஜீரியா ஸ்ட்ரீட்டின் பாதைகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு திசையிலும் இரண்டு முதல் மூன்று பாதைகள் வரை அதிகரித்தல். இந்த மாற்றங்கள் சாலையின் திறனை இரு திசைகளிலும் மணிக்கு 6,000 வாகனங்களில் இருந்து 9,000 வாகனங்களாக உயர்த்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல், RTA புதிய சைக்கிள் ஓட்டும் தடங்கள் மற்றும் பாதசாரி பகுதிகள் மற்றும் சர்வீஸ் சாலைகளை அப்பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய பலன்
அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டில் இருந்து துனிஸ் ஸ்ட்ரீட் வரையிலான பயண நேரம் 15 நிமிடங்களில் இருந்து வெறும் 7 நிமிடங்களாக பீக் ஹவர்ஸில் குறைகிறது. இது 50 சதவீதத்திற்கும் அதிகமான பயண நேரத்தை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel