ADVERTISEMENT

UAE: மினிவேன், டிரக்கின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்துகள்.. சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சுழன்ற வாகனங்கள்.. ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

Published: 29 Jul 2024, 7:18 PM |
Updated: 29 Jul 2024, 7:24 PM |
Posted By: admin

அபுதாபி காவல்துறையின் சாலை கேமராக்களில் சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளானது வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்துக்கள் ஆகும். இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) காவல்துறை பகிர்ந்த 45 வினாடி கிளிப்பில் டயர் வெடித்ததால் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு போக்குவரத்து விபத்துக்கள் காணப்பட்டன.

ADVERTISEMENT

முதலாவதாக, ஒரு மினி வேன் வேகமாகப் பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென டயர்கள் வெடித்து, வாகனம் திசைதிருப்பப்பட்டு, சாலையின் குறுக்காக சென்றது. ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்ற போதிலும், முடியாமல் மினிவேன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடையின் மீது மோதியது. மோதியதன் பின்னர் வேன் சுழன்று, வேகமான பாதையில் இருந்து சாலையின் வலது பாதை வரை புரட்டப்பட்டது.

இரண்டாவதாக, வலது பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு மினி டிரக்கின் டயர்கள் திடீரென வெடித்தது. இந்த எதிர்பாராத டயர் வெடிப்பால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பல பாதைகள் வழியாகச் சென்று, இறுதியில் தடையில் மோதியது. இந்த இரண்டு விபத்துகளுமே எதிர்பாராமல் டயர் வெடித்ததனால் ஏற்பட்ட விபத்துகள் ஆகும்.

ADVERTISEMENT


இது போன்ற டயர் வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் அபுதாபி காவல்துறையினர், தங்கள் டயர்களை சரிபார்த்து, குறிப்பாக கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் விளைவாக பெரிய போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய சேதங்கள் அல்லது விரிசல்கள் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் விவரக்குறிப்புகளுடன் பொருந்தக்கூடிய டயர்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட டயரின் பொருத்தம், அளவீடு, அது பொறுத்துக்கொள்ளும் வெப்பநிலை, பொருத்தமான சுமை, உற்பத்தி ஆண்டு மற்றும் நீண்ட பயணங்களுக்கு தங்கள் வாகன டயர்களின் பொருத்தம் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் சேதமடைந்த டயர்களுடன் வாகனம் ஓட்டுவது 500 திர்ஹம் அபராதம், 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் ஒரு வார வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடிய குற்றமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel