ADVERTISEMENT

துபாய்: ஷேக் சையது சாலையில் இருந்து நேரடியாக மால் ஆஃப் எமிரேட்ஸிற்கு செல்ல புதிய பாலம்..!!

Published: 28 Jul 2024, 2:38 PM |
Updated: 28 Jul 2024, 2:42 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் இன்டர்செக்‌ஷன்களின் நுழைவாயில்களை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. சுமார் 165 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளுக்கான மேம்பாடுகள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷேக் சயீத் சாலையில் 300-மீட்டர் நீளத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் வாகன பார்க்கிங் பகுதிகளுக்கு நேரடி அணுகலை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பாலம் தொடர்பாக RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான இயக்குநர் ஜெனரல் மட்டர் அல் தயர் கூறுகையில், “இந்தத் திட்டத்தில் ஷேக் சயீத் சாலையில் 300 மீட்டர் பாலத்தை ஒற்றைப் பாதையுடன் நிர்மாணித்து, அபுதாபி மற்றும் ஜெபல் அலியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கான மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பார்க்கிங் பகுதிக்கான அணுகலை வழங்கும். கூடுதலாக, உம் சுகீம் இன்டர்செக்‌ஷனில் உள்ள தற்போதைய வளைவானது, உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் இருந்து மாலின் வாகன பர்க்கிங் பகுதிக்கு செல்லும் தற்போதைய பாலத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள இன்டர்செக்‌ஷனை மேம்படுத்துவதன் மூலம் தெற்கு நோக்கி விரிவுபடுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

“கூடுதல் பணிகளில் மாலைச் சுற்றி 2.5 கிமீ நீளமுள்ள மேற்பரப்பு சாலைகளை மேம்படுத்துதல், மூன்று சிக்னல் செய்யப்பட்ட இன்டர்செக்‌ஷனை உருவாக்குதல், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்தில் பேருந்து நிலையத்தை மாற்றியமைத்தல், கெம்பின்ஸ்கி (Kempinski) ஹோட்டலுக்கு அடுத்துள்ள ஸ்ட்ரீட்டை ஒரு வழியிலிருந்து இருவழியாக மாற்றுதல் ஆகியவை அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதைகளை மேம்படுத்துதல், நடைபாதை, விளக்குகள், போக்குவரத்து சிக்னல்கள், மழைநீர் வடிகால் அமைப்பு போன்றவையும் இதில் உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில் “இந்த திட்டம் அபுதாபி மற்றும் ஜெபல் அலியிலிருந்து மால் ஆஃப் எமிரேட்ஸ்க்கு வரும் போக்குவரத்திற்கான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் அதாவது, இது 10 நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாக குறைக்கப்படும். இது உம் சுகீமிலிருந்து வரும் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 15 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்களாக குறைக்கப்படும். அதன் மூலம்  மாலைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தப்படும்” என்று அல் டேயர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2005 இல் திறக்கப்பட்ட மால் ஆஃப் தி எமிரேட்ஸ், ஆண்டுதோறும் 40 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்கிறது. இந்த மாலில் முன்னணி பேஷன் பிராண்டுகளின் 454 கடைகள், 96 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மற்றும் ski dubai மற்றும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய VOX சினிமா போன்ற தனித்துவமான பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன.

இந்த மாலில் கெம்பின்ஸ்கி ஹோட்டல் மால் ஆஃப் தி எமிரேட்ஸ், ஷெரட்டன் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஹோட்டல் மற்றும் நோவோடெல் சூட்ஸ் மால் அவென்யூ ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும். கூடுதலாக, இது ஒரு பாதசாரி பாலம் வழியாக மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel