ADVERTISEMENT

துபாயின் பிரபல குடியிருப்பு பகுதிகளுக்கு புதிதாக இரண்டு பேருந்து வழித்தடங்களை இயக்கும் RTA..

Published: 5 Jul 2024, 5:32 PM |
Updated: 5 Jul 2024, 5:38 PM |
Posted By: admin

துபாயின் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்து சேவையானது தற்பொழுது புதிதாக இரண்டு வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களும் துபாயின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் படி முதலாவது வழித்தடமான DH1, துபாய் ஹில்ஸ் மற்றும் ஈக்விட்டி மெட்ரோ ஸ்டேஷன் இடையே இயங்குகிறது மற்றும் DA2 வழித்தடமானது, டமாக் ஹில்ஸ் மற்றும் துபாய் ஸ்டுடியோ சிட்டி இடையே பயணிக்கிறது என கூறப்பட்டுள்ளது. DH1 என்பது ஒரு மணி நேர இடைவெளியுடன் இயக்கப்படும் பேருந்து சேவையாகும். முதல் பயணம் துபாய் ஹில்ஸில் இருந்து காலை 7.09 மணிக்குப் புறப்பட்டு, கடைசிப் பயணம் வார நாட்களில் இரவு 10.09 மணிக்கும், வார இறுதி நாட்களில் (வெள்ளி முதல் ஞாயிறு வரை) நள்ளிரவு 12.09 மணிக்கும் (நள்ளிரவு கடந்தது) இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மற்றொரு வழித்தடமான DA2, DAMAC ஹில்ஸ் மற்றும் துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கு இடையே இரண்டு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பயணம் DAMAC ஹில்ஸில் இருந்து காலை 5.47 மணிக்கும், கடைசி பயணம் தினமும் இரவு 9.32 மணிக்கும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பயணத்திற்கு 5 திர்ஹம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RTA-வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் முகமது ஷகேரி கூறுகையில், இந்த இரண்டு வழித்தடங்களும் RTA-வின் உள் பேருந்து நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கும், எமிரேட்டில் உள்ள பிற பொதுப் போக்குவரத்துடன் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில் “RTA-வானது பொது பேருந்து வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும், மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து போன்ற பிற வெகுஜன போக்குவரத்து முறைகளுடன் அதன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. இந்த பல்வேறு வழிமுறைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது, அவற்றை மக்களின் விருப்பமான போக்குவரத்து முறைகளாக மாற்றுகிறது,” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel