ADVERTISEMENT

UAE: சாலை விபத்தால் ஏற்படும் இறப்பை குறைக்க வாகனங்களில் புதிய எமர்ஜென்ஸி கால் சிஸ்டம் அறிமுகம்..!!

Published: 10 Jul 2024, 6:21 PM |
Updated: 10 Jul 2024, 6:52 PM |
Posted By: admin

வாகனங்களில் ஏற்படும் விபத்துகளின் அபாயத்தை குறைக்கும் நோக்கில் அவசரகால சேவைகளின் பதிலளிப்பு நேரத்தை 40 சதவீதம் குறைக்கும் நோக்கில், இ-கால் சிஸ்டம் எனப்படும் வாகனங்களில் அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது குறிப்பிட்ட சில வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இ-கால் அமைப்பின் விளைவாக, வாகனத்தில் உள்ள சென்சார்கள் கடுமையான விபத்தை கண்டறிந்தவுடன் காவல்துறைக்கு அவசர செய்தியை அனுப்புவதன் மூலம் இது விரைவாக செயல்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் மாதிரி, இடம், எரிபொருள் வகை மற்றும் வாகனத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்களையும் இது காவல்துறைக்கு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் அபுதாபியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-கால் முறையைப் புதுப்பிப்பதன் நோக்கம், சாலைகளில் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை 2 முதல் 10 சதவீதம் வரை குறைப்பதும், கடுமையான காயங்களை 2 முதல் 15 சதவீதம் வரை குறைப்பதும் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவசர அழைப்புகளுக்கு அதாவது 4 நிமிடங்களுக்குள் இந்த எமர்ஜென்சி கால் சேவை செயல்படுகிறது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உள்துறை அமைச்சகத்தால் (MOI) மே மாதம் வெளியிடப்பட்ட திறந்த தரவுகளின்படி, 2022 உடன் ஒப்பிடும்போது அமீரக சாலைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது 2023 இல் நாடு முழுவதும் 352 சாலை இறப்புகள் ஏற்பட்டன என்றும், 2022 இல் 343 இறப்புகள் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2023 எண்ணிக்கையானது 2021 இல் பதிவு செய்யப்பட்ட 381 இறப்புகளை விட 8 சதவீதம் குறைவாகும்.

ADVERTISEMENT

வாகனங்களுக்கான இந்த e-Call அமைப்பானது அமீரக தொலைத்தொடர்பு, டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் (TDRA), தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றால் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். அபுதாபியைப் போலவே, துபாய் காவல்துறையில் உள்ள AML (Advanced Machine Location) எனப்படும் அமைப்பானது, விபத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் போன்களை இயக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel