ADVERTISEMENT

ஓமானில் வரும் ஆகஸ்ட் 2 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. சவூதியில் மணல்புயல் எச்சரிக்கை..!!

Published: 30 Jul 2024, 9:11 PM |
Updated: 30 Jul 2024, 9:19 PM |
Posted By: admin

வளைகுடா பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், ஓமானில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமானின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூலை 30) மாலை முதல் அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நீடிக்கும் என்பதால் குடியிருப்பாளர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த கால கட்டத்தில் பல்வேறு தீவிர தன்மை மற்றும் இடியுடன் கூடிய மழையும் மேகமூட்டமான வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாறைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிரம்பி வழியும் அபாயம் இருப்பதால் குடியிருப்பாளர்கள் கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையினால் ஓமானின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம் என்றும் இதில் மஸ்கட் மற்றும் தோஃபர் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் மணல் புயல் எச்சரிக்கையையும் ஆணையம் விடுத்துள்ளது. இதில் ஆதம், ஹைமா மற்றும் மர்முல் ஆகிய இடங்கள் அடங்கும்.  

ADVERTISEMENT

இதற்கிடையில், சவுதி அரேபியாவிலும் மழை மற்றும் மணல் புயல்களும் நிலவி வருகின்றன. மக்காவில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்கிழமை) ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மக்காவின் கடலோரப் பகுதிகள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் புழுதிப் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்றே அமீரகத்திலும் கடந்த ஒரு சில நாட்களாக புழுதிப்புயல் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT