உலகளவில் பிரசித்தி பெற்ற துபாய் மாலில் கட்டண பார்க்கிங் முறையானது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சாலை கட்டண ஆபரேட்டரான சாலிக்கின் போர்டுகள் துபாய் மாலுக்கு உள்ளேயும் வெளியேயும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பார்க்கிங் நுழைவாயில்கள் மற்றும் போர்டுகளிலும் சாலிக் லோகோ வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகன நிறுத்துமிடங்களில் எந்தவிதமான பேரியர்களும் கேமராக்களும் காணப்படவில்லை.
ஏற்கெனவே இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி ஜூலை 1 முதல், சாலிக் நிறுவனத்துடன் இணைந்து துபாய் மாலில் கட்டண வாகன நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் துபாய் மாலில் இருக்கக்கூடிய கிராண்ட், சினிமா மற்றும் ஃபேஷன் பார்க்கிங்கிற்கு இந்த கட்டண பார்க்கிங் பொருந்தும் என்றும் Zabeel மற்றும் Fountain View பார்க்கிங் தற்போதைக்கு இலவசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வார நாட்களில் நான்கு மணிநேரமும், வார இறுதியில் ஆறு மணிநேரமும் இந்த பார்க்கிங் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு, மாலில் ஒவ்வொரு கூடுதல் மணிநேரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் 24 மணி நேரத்திற்கும் மேலாக பார்க்கிங்கைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் 20 முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண விபரங்கள் மாலில் உள்ள பல்வேறு லிஃப்ட்களில் ஒட்டப்பட்டுள்ளன. துபாய் மாலின் கட்டண விபரங்களை கீழே உள்ள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஜூலை 1 முதல் கட்டண முறை: துபாய் மால் பார்க்கிங் குறித்த கேள்விகளும், பதில்களும் இங்கே..!!
ஆபரேட்டர்களின் கூற்றுப்படி, பார்க்கிங்கிலிருந்து வெளியேறியவுடன் காரின் சாலிக் அக்கவுண்ட்டில் இருந்து கட்டணம் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் மால் பார்க்கிங்கை அணுகவும் பயன்படுத்தவும் கார்களுக்கு சாலிக் டேக் தேவை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சாலிக் டேக் இல்லாத கார்கள் எப்படி நிறுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel