ADVERTISEMENT

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களை கண்டறிய புதிய பிரச்சாரம்.. கொத்து கொத்தாக பிடிப்பட்ட வெளிநாட்டவர்கள்..

Published: 2 Jul 2024, 11:25 AM |
Updated: 2 Jul 2024, 11:27 AM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து விசாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருபவர்களில் வேலையை விட்டு நீங்கியவர்கள் மற்றும் விசா முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் வேறு வேலைகள் பார்த்துக் கொண்டு தொடர்ந்து தங்களது நாடுகளில் வசித்து வருபவர்கள் போன்ற சட்ட விரோதமாக பல வெளிநாட்டவர்கள் குவைத்தில் உள்ளனர். இந்நிலையில் குவைத்தின் பல்வேறு கவர்னரேட்டுகளில் ரெசிடென்ஸி சட்டங்களை முறையாக அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு பிரச்சாரம் நேற்று (ஜூலை 1) தொடங்கிய பின்னர் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவர்கள், ​​சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத பொது மன்னிப்பை அரசு வழங்கியிருந்த போதும் அதனை பயன்படுத்தத் தவறி தொடர்ந்து நாட்டிலேயே தங்கியிருப்பதால் உள்துறை அமைச்சகத்தால் கைது செய்யப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு சமூக ஊடக பதிவில், ரெசிடென்ஸி விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் பிற சட்டக் குற்றவாளிகளை குறிவைத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனிநபர்கள் தங்களுடைய ரெசிடென்ஸி நிலையை முறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ காலக்கெடு ஜூன் 30, 2024 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

ஜூலை 1, திங்கட்கிழமை தொடங்கிய இந்த பிரச்சாரம், ஏற்கனவே சட்டத்தை மீறி தங்கியிருந்த பலரை கைது செய்ததாக தெரிவித்திருந்த போதிலும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் குறிப்பிடவில்லை. இவ்வாறு பிடிபட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவது உட்பட சட்டத்தின்படி செயல்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியை வலியுறுத்தும் வகையில், ரெசிடென்ஸி சட்டங்களை மீறுவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து புகார் செய்வதில் பொதுமக்கள் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன்படி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் விதிமீறுபவர்களை மறைக்கவோ அல்லது அடைக்கலம் கொடுக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஏனெனில் இது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் குவைத்தின் அனைத்து கவர்னரேட்டுகளிலும் பாதுகாப்பைப் பேணுவதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் எந்தவொரு மீறல்களையும் புகாரளிக்க அவசர தொலைபேசி எண்ணை (112) தொடர்புகொள்வதன் மூலம் ரெசிடென்ஸி விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய உதவுமாறு பொதுமக்களை அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel