துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள பல குடியிருப்பாளர்கள் இன்று (சனிக்கிழமை) தங்கள் வீட்டு இணைய சேவைகளில் டூ (du) சேவையை பயன்படுத்தும் நபர்கள் இடையூறு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஊடக தளத்தில் ஒரு குடியிருப்பாளர் கூறுகையில், “அல் கான், அல் தாவுன், ஷார்ஜா ஆகிய இடங்களில் இணைய சேவையில் பிரச்சனை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதே போல் மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில் “எனது வீட்டில் இணைய சேவைகள் காலையிலிருந்து செயலிழந்துள்ளன. தயவு செய்து தேவையானவற்றை விரைவில் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். வேறொரு நபர் தெரிவிக்கையில் “எனது வீட்டு இணையத்தில் எனக்கு பிரச்சனை உள்ளது, அது காலை 9 மணிக்கு துண்டிக்கப்பட்டது, இப்போது வரை அது முடக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இது போன்றே வீட்டில் இருந்து வேலை செய்யும் நபர்கள், விடுமுறையில் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் என பல குடியிருப்பாளர்கள் தங்கள் இணைய சேவையில் பாதிப்பு இருப்பதாக தொடர்ந்து புகாரளித்துள்ளனர். ஒரு சிலர் தங்களால் ஃபோன் கால் செய்ய முடியிவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது பற்றி Du நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு (@duCares) அதன் வாடிக்கையாளர்களின் பதிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக: “வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளுப் பிரச்சனைகளுக்கு நாங்கள் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த சிக்கலை விரைவில் தீர்க்க உள்ளனர்” என்று கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel