ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறையை அறிவித்த அமீரகம்..!!

Published: 2 Jul 2024, 7:41 PM |
Updated: 2 Jul 2024, 7:54 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் ஜூலை 7ம் தேதியன்று இஸ்லாமிய புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில் அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டு விடுமுறையை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி, இந்த தேதி முதல் மாதமான முஹர்ரம் 1 என்றும், இது புதிய ஹிஜ்ரி ஆண்டு 1446 ஹிஜ்ரியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாகும். எனவே இந்த இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் குடியிருப்பாளர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேசமயம் அமீரகத்தில் வெள்ளி அல்லது சனிக்கிழமையை வார விடுமுறை நாட்களாக சில நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளி அல்லது சனிக்கிழமையுடன் கூடுதலாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுமுறையை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில், குடியிருப்பாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் இரண்டு விடுமுறைகள் உள்ளன. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளும் அடங்கும். இதனையடுத்து கடைசி உத்தியோகபூர்வ விடுமுறை நாளான நீண்ட வார இறுதி விடுமுறையில் தேசிய தின விடுமுறையும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel