ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பல குடும்பங்கள் அமீரகத்திலிருந்து தங்களின் சொந்த நாடுகளுக்கு பயணிக்க உள்ளனர். எனவே இன்று ஜூலை 6, சனிக்கிழமை முதல் விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துபாயிலிருந்து பயணிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களின் பயணத்தை முறையாக திட்டமிடுமாறு துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, விமான நிலையத்தை நெருங்கும் சாலைகளில் கூடுதல் போக்குவரத்து, விமான நிலையத்தில் அதிகமான மக்கள் குடியேற்றம் வழியாகச் செல்வது, மற்றும் கூட்டங்களுக்கு இடையே பயணம் செய்து போர்டிங் கேட்களை அடைய எடுக்கும் நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதில் மன அழுத்தம் இல்லாமல் பயணிக்க எமிரேட்ஸ் நிறுவனத்தின் சேவைகளை பயண்படுத்தவும், விமான நிலையத்திற்கு விரைவாக வந்து சேரவும், புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே இமிகிரேஷனை கடந்து செல்வதை உறுதிசெய்யவும், புறப்படுவதற்கு 1.5 மணிநேரத்திற்கு முன் போர்டிங் கேட்டை அடைந்து விடவும் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மன அழுத்தமில்லாமல் பயணிக்க பயணிகள் எடுக்க வேண்டிய சில படிகள் இங்கே:
வீட்டிலேயே செக்-இன் செய்யுங்கள்
எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எமிரேட்ஸ் ஹோம் செக் இன் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முகவர்கள் வாடிக்கையாளர்களின் வீடு, ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் செக்-இன் செயல்முறையை முடித்து விமானத்திற்கு தங்களின் ஹேண்ட் லக்கேஜ்களுடன் சிறிது நேரம் கழித்து வரலாம்.
பயணிகள் இந்த சேவையை பெற விமான பயணத்திற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவைக்கு கட்டணம் வசூழிக்கப்படும், எனினும் முதல் வகுப்பு பயணிகள் மற்றும் பிளாட்டினம் ஸ்கைவர்ட்ஸ் உறுப்பினர்களுக்கு ஹோம் செக்-இன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எமிரேட்ஸ் ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தவும்
விமானங்களை முன்பதிவு செய்யவும், தேதிகளை மாற்றவும் எமிரேட்ஸ் மொபைல் ஆப்பை பதிவிறக்கி, பெரும்பாலான இடங்களுக்கு டிஜிட்டல் போர்டிங் பாஸைப் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் Emirates.com இல் செக்-இன் செய்யலாம். ஆன்லைன் செக்-இன் மற்றும் ஆப் செக்-இன் ஆகிய இரண்டும் விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரம் முன்னதாகவே திறந்திருக்கும்.
லக்கேஜ்களை சீக்கிரம் இறக்கி விடுங்கள்
எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் பயணத்திற்கு முந்தைய இரவு விமான நிலையத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் தங்கள் லக்கேஜ்களை இறக்கிவிடலாம். துபாயில் இருந்து புறப்படும் பயணிகள், முன்கூட்டியே செக்-இன் செய்து, புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பும், அமெரிக்காவுக்குப் பறக்கும் பட்சத்தில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பும் லக்கேஜ்களை இறக்கிவிடலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel