ADVERTISEMENT

அமீரகத்தில் இரு வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்து.. ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்..

Published: 14 Jul 2024, 11:42 AM |
Updated: 14 Jul 2024, 11:51 AM |
Posted By: admin

அமீரகத்தில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரழந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது. நேற்று ஃபுஜாரா பகுதியில் உள்ள சாலையில் லாரியும் கழிவுநீர் டேங்கரும் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மற்றொருவர் காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த இரண்டு வாகனங்களில் ஒன்று ரெட் சிக்னலின் போது நிற்காமல் சென்றதால் இந்த கடும் விபத்து ஏற்பட்டதாக ஃபுஜைரா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோதலின் காரணமாக இரு வாகனங்களும் கடுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளன. இதன் புகைப்படங்கள அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில், டேங்கரில் இருந்து பெரும் கரும் புகை மேகங்கள் வெளியேறுவதையும், சாலை முழுவதும் தீ பரவுவதையும் காணலாம். மற்ற ஓட்டுனர் லேசான காயம் அடைந்து, உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel