ஒவ்வொரு வருட கோடைகாலத்தின் போதும் துபாயில் நடைபெறும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) இந்த வருடத்திற்கான பதிப்பு தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெய்ல் எஸ்டாப்லிஷ்மென்ட் (DFRE) ஏற்பாடு செய்திருக்கும் DSS 2024 ஜூன் 28 முதல் செப்டம்பர் 1 வரை இயங்கும், மேலும் இந்த கோடை மாதங்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு, வேடிக்கை மற்றும் தள்ளுபடிகள் நிறைந்த ஷாப்பிங் அனுபவத்தைக் கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் முன்னெப்போதையும் விட அதிகமான வெற்றியாளர்களை 50 மில்லியன் திர்ஹம்கள் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுகள் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் புத்தம் புதிய கார்கள், நகைகள், ரொக்கப்பணம், வெகுமதி புள்ளிகள் மற்றும் வவுச்சர்கள் வரை என பல்வேறு பரிசுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள் வெல்லும் வாய்ப்பு
துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமம் (DSMG) ஏற்பாடு செய்துள்ள துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் ரேஃபிள் பிரச்சாரம் 2024 இன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஷாப்பிங் செய்பவர்கள் ஆறு புத்தம் புதிய GAC GS8 2024 வாகனங்களில் ஒன்றை வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் பங்கேற்க கூடிய 18 வெவ்வேறு மால்களில் 200 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவழித்தால் டிராவில் நுழைய ஒரு டிஜிட்டல் ரேஃபிள் கூப்பனைப் பெறலாம். இதனடிப்படையில் வெற்றியாளர்கள் வாரந்தோறும் பெயரிடப்படுவார்கள். மேலும் முதல் டிரா ஜூலை 13 அன்று நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியின், spend and win போட்டி மூலம் இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Lexus ஹைப்ரிட் SUVகளை வெல்லும் வாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழித்த நபர்கள், BLUE ஷாப்பிங் அப்ளிகேஷனில் தாங்கள் ஷாப்பிங் செய்த பில்லை பதிவேற்றி டிராவில் நுழையலாம் என கூறப்பட்டுள்ளது.
நகை பரிசுகள்
துபாய் ஜூவல்லரி குழுமமானது அதன் வருடாந்திர தங்க நகை ஒப்பந்தங்களை இந்த ஆண்டும் மீண்டும் கொண்டுவருகிறது. இதன்படி ஷாப்பிங் செய்பவர்கள் வைரம் மற்றும் முத்து நகைகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியை அனுபவிக்கலாம் மற்றும் 1,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் நகையை வாங்கினால் உடனடி பரிசுகளைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வைரங்களுக்கு 2,500 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் நபர்களுக்கு தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குறைந்தபட்சம் 1,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நகையை வாங்குபவர்களுக்கு, ஒவ்வொன்றும் 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 20 வவுச்சர்களை வெல்வதற்காக ஒரு ரேஃபிளில் நுழையும் வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Wafi மால், Wafi உணவகங்கள், Wafi Health Club & Spa, Khan Murjan Souk மற்றும் Wafi ஹோட்டல்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவு செய்தால் 70,000 திர்ஹம் மதிப்புள்ள 18 கேரட் வெள்ளைத் தங்கத்தில் அமைக்கப்பட்ட காதணிகள், 22.2 காரட் வைர நெக்லஸ் மற்றும் பிற பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பிற்காக பார்வையாளர்கள் ஒரு பெரிய ரேஃபிள் டிராவில் நுழைய பதிவு செய்யலாம்.
ரொக்கப் பரிசுகள் மற்றும் வவுச்சர்கள்
Mercato ஷாப்பிங் மால் மற்றும் டவுன் சென்டர் ஜுமைராவில் நடத்தப்படும் ஷாப் அண்ட் வின் ப்ரொமோஷன் மூலம், குறைந்தபட்சம் 200 திர்ஹம்ஸ் செலவழித்து வாராந்திர ரேஃபிள் டிராக்களில் நுழையலாம். இந்த டிராவில் செப்டம்பர் 1 வரை ஒவ்வொரு வாரமும், இரண்டு வெற்றியாளர்கள் 5,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வெல்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதுபோல ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறும் Rivoli Group DSS Beat the Clock மூன்று நாள் ப்ரொமோஷனில், Rivoli EyeZone மற்றும் Hour Choice இல் கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், 1,000 திர்ஹம்ஸ் முதல் 5,000 திர்ஹம்ஸ் வரையிலான மதிப்பில் வவுச்சர்களை வெல்லலாம்.
அத்துடன் Majid Al Futtaim மால்களில், 300 திர்ஹம்ஸ் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் DSS SHARE மில்லியனர் ராஃபிள்களில் நுழைவார்கள், இதில் ஆறு பேர் செப்டம்பர் 1 வரை வாராந்திர டிராவில் 1 மில்லியன் SHARE புள்ளிகளை வெல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel