ADVERTISEMENT

UAE: உலகின் முதல் முறையாக பயோமெட்ரிக் ‘ஸ்மார்ட் டிராவல்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அபுதாபி ஏர்போர்ட்..!!

Published: 21 Jul 2024, 7:06 PM |
Updated: 21 Jul 2024, 8:37 PM |
Posted By: admin

அபுதாபி ஏர்போர்ட்ஸ் மற்றும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) ஆகியவை இணைந்து உலகின் முதல் வகையான பயோமெட்ரிக் ஸ்மார்ட் டிராவல் திட்டத்தை அபுதாபியில் இருக்கக்கூடிய சையத் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்குவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தானியங்கி பயணி பதிவு சேவை, சுய-சேவை பேக்கேஜ் டெலிவரி, இ-கேட் மற்றும் போர்டிங் கேட்களில் முக அங்கீகார சரிபார்ப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தி பயண ஆவணங்கள் மற்றும் பயணிகளுக்கான விமான நிலைய ஊழியர்களுடன் தொடர்பு தேவைகளை நீக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பகுதிகளிலும் பயோமெட்ரிக் அங்கீகார அமைப்புகளை ஒருங்கிணைக்க மூன்று கட்டங்களாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி, பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளை தானாக அங்கீகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி விமான நிலையங்கள் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் கடந்த நவம்பர் 2023 இல் சையத் சர்வதேச விமான நிலையத்தில் புதிய டெர்மினலை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் பல பகுதிகளில் பயோமெட்ரிக் அமைப்புகளை செயல்படுத்தியது. இதில் பயண ஆவணங்கள் அல்லது விமான நிலைய ஊழியர்களுடன் நேரடி தொடர்பு தேவையில்லாமல், தானியங்கி பயணி பதிவு சேவை, சுய-சேவை லக்கேஜ் டெலிவரி செய்தல் மற்றும் மின்-வாயில்கள் மற்றும் போர்டிங் கேட்களில் முக அங்கீகார சரிபார்ப்பு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபி ஏர்போர்ட்ஸ் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக ஐந்து கூடுதல் விமான நிறுவனங்களுக்கு பயோமெட்ரிக் அமைப்புகளை அறிமுகம் செய்து, அனைத்து போர்டிங் கேட்களையும், பயணிகளின் பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்வதற்கும் முக அங்கீகாரத்தை எளிதாக்குவதற்கும் நியமிக்கப்பட்ட டிரான்ஸிட் பகுதிகளில் புதிய இ-கேட்களை நிறுவத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சர்வதேச விமான நிலையத்தின் தலைமை தகவல் அதிகாரி ஆண்ட்ரூ மர்பி கூறுகையில் “2025 ஆம் ஆண்டளவில், அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பகுதிகள் மற்றும் பிற விமான நிறுவனங்களில் இந்த அமைப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அதே போல் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் பொது இயக்குநர் சயீத் சைஃப் அல் கைலி தெரிவிக்கையில் “பயோமெட்ரிக் ஸ்மார்ட் டிராவல் திட்டம், சையத் சர்வதேச விமான நிலையத்தில் பயண அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அதிக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த திட்டம் பயணிகளுக்கு சேவை செய்வதற்கான நேரத்தை 25 வினாடிகளில் இருந்து ஏழு வினாடிகளாக குறைக்கிறது. அத்துடன் டிக்கெட் மற்றும் பயண ஆவண சரிபார்ப்பை ஒருங்கிணைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பயோமெட்ரிக் ஸ்மார்ட் டிராவல் திட்டம், விலையுயர்ந்த உள்கட்டமைப்பு விரிவாக்கங்களின் தேவையை நீக்கி, அடையாள ஆவணங்களில் மோசடியை திறம்பட கண்டறிவதன் மூலம் விமான செயல்திறனை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel