ADVERTISEMENT

அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு.. ரெசிடென்ஸி விசா விதிமீறல்களுக்கு 2 மாத சலுகை காலம்..

Published: 1 Aug 2024, 1:16 PM |
Updated: 1 Aug 2024, 1:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகமானது பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை கொண்டுள்ள நிலையில் அதில் விசிட் விசா, ரெசிடென்ஸி விசா என இரு பிரிவில் வெளிநாட்டவர்கள் அமீரகத்தில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ரெசிடென்ஸி விசாவில் விதிகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியை தற்பொழுது அமீரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி ரெசிடென்ஸ் விசா விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1, 2024 இல் தொடங்கும் சலுகைக் காலம், விதிகளை மீறி தங்கியுள்ள நபர்கள் தங்கள் விசா நிலையை முறைப்படுத்த அல்லது அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் “விசா விதிகளை மீறுபவர்களுக்கு சட்டத்தின்படி அவர்களின் நிலையை முறைப்படுத்துவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை பிரதிபலிக்கும் சைகையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் விசா காலம் முடிந்து ஓவர்ஸ்டேயில் தங்கியிருக்கும் நபர்கள் மீதான அபராதம் கடந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் விசா காலம் முடிந்தும் அதிக நாட்கள் தங்கியிருந்தால் அவர்கள் கூடுதலாக தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் இப்போது 50 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும்.

மேலும் ஸ்பான்சர் செய்யப்பட்ட விசாவாக இருந்தால், ஸ்பான்சர் செய்யப்பட்ட நபருடைய ரெசிடென்ஸி விசாவின் காலாவதி தேதி ஸ்பான்சரின் விசா காலத்தை விட அதிகமாக இருக்காது, மேலும் அது காலாவதியாகும் முன் புதுப்பிக்கப்பட வேண்டும். விசாவை புதுப்பிக்கும் செயல்முறையானது அபராதம் விதிக்கப்படாமல் அல்லது சட்டரீதியான விளைவுகளை சந்திக்காமல் அமீரகத்தில் சட்டப்பூர்வமாக வாழ வெளிநாட்டினரை அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

அமீரக சட்டங்கள் இவ்வாறு இருக்க இந்த விதிகளை மீறி தொடர்ந்து ஒரு சில வெளிநாட்டவர்கள் அமீரகத்தில் தங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அமீரக அரசானது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel