ADVERTISEMENT

1,000 பைக் ரைடர்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும் துபாய் நிறுவனம்.. நேர்காணலில் கலந்துகொள்வது எப்படி..??

Published: 20 Aug 2024, 12:55 PM |
Updated: 20 Aug 2024, 1:00 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு, வசதிகள் மேலாண்மை, பணச் சேவைகள் மற்றும் பணியாளர் சேவைகளை வழங்கும் துபாயை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற டிரான்ஸ்கார்ட் (Transguard) குழுமம், திங்களன்று 1,000 மோட்டார் பைக் ரைடர்களை வேலைக்கு அமர்த்தவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கான நேர்காணலை நடத்துவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 2024 அல்லது அதற்கு முன் வழங்கப்பட்ட அமீரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை கிடைக்கப்பெற்றவர்கள் நிலையான மாத சம்பளம், டிப்ஸ், நிறுவனம் வழங்கும் மோட்டார் பைக், மொபைல் போன், சிம் கார்டு, தங்குமிடம், மருத்துவக் காப்பீடு, விசா, வருடாந்திர விமான டிக்கெட் மற்றும் 30 நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஆகியவற்றை பெறுவார்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் தனது இணையதளத்தில் 1,500 திர்ஹம்ஸ் சம்பளம், ஓவர்டைம் மற்றும் எரிபொருள் அலவன்ஸ் போன்றவற்றிற்கு 300 திர்ஹம்ஸ் வரை பட்டியலிட்டுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் 19 முதல், விண்ணப்பதாரர்கள் துபாயில்  ஜெபல் அலி 6 மற்றும் சோனாபூர் 11 ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய அதன் தங்குமிடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது Transguard நிறுவனத்தின் 2024 ம் ஆண்டிற்கான இரண்டாவது பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பாகும். இதற்கு முன்னர் கடந்த மே மாதம் வணிக தீர்வுகள் வழங்குநர் எமிரேட்ஸ் தலைமையகத்தில் ஓட்டுநர்களுக்காக (chauffeur drivers) தொடர்ச்சியான நேர்காணலை மேற்கொண்டது. 2001 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தற்பொழுது வரை 61,000 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT