ADVERTISEMENT

துபாயை தொடர்ந்து அபுதாபியிலும் இலவச கார் பரிசோதனை சேவை அறிவிப்பு..!! 12 இடங்களில் சேவை கிடைக்கும் என தகவல்..!!

Published: 2 Aug 2024, 5:06 PM |
Updated: 2 Aug 2024, 5:13 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக ஒரு சில சமயங்களில் கார் விபத்துக்களின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த காலகட்டத்தில் டயர் வெடிப்புகள் விபத்துக்களுக்கு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், தீ விபத்துகள் போன்ற பிற சம்பவங்களும் மரண விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

எனவே வாகன ஓட்டிகள் தொடர்ந்து தங்களின் கார்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை அவ்வப்போது சரிபார்க்க கார்களை சர்வீஸ் செய்வது அவசியமாகும். இவ்வாறு வாகன ஓட்டிகளின் நலன் மற்றும் சமூக நலன் கருதி துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு ஆகஸ்ட் இறுதி வரை இலவச கார் பரிசோதனை சேவையை வழங்குவதாக அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அபுதாபி காவல்துறையும் இந்த முன்முயற்சியை கையில் எடுத்துள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடையில் இலகுரக வாகனங்களுக்கான இலவச சோதனையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் புதிய முயற்சியை அபுதாபி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் 12 இடங்களில் அமைந்துள்ள Adnoc விநியோகத்தின் சேவை மற்றும் வாகன ஆய்வு மையங்களில் (Adnoc distribution’s service and vehicle inspection centers) இந்த இலவச பரிசோதனை கிடைக்கும் என கூறப்பட்டுறளது. இது இன்ஜின் ஆயில், பிரேக் திரவம் (brake liquid), குளிரூட்டி (coolant) மற்றும் காற்று வடிகட்டிகள் (air filter) போன்றவற்றின் ஆய்வுகளை உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது. கோடை காலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என இம்முயற்சி குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT